செய்திகள் :

கொங்கு அரசியலில் பரபரப்பு: திமுக அமைச்சரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி! - காரணம் என்ன?

post image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் அமைந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட கோவில் அப்புறப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக கோவில் பூட்டப்பட்டிருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால், இக்கோவில் இந்து அறநிலையத்துறை வசம் ஏற்கப்பட்டது.

கடந்த 24.11.2025 அன்று சுதர்சன யாகம் நடத்தப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு கோவில் திறக்கப்பட்டது. நேற்று பௌர்ணமி மற்றும் நட்சத்திர பூஜை கோவிலில் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் சுவாமி தரிசனம்

இந்த நிலையில், நேற்று காலை கொங்கு பெருமாள் கோவிலுக்கு குமாரபாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். பின்னர், கோவிலில் சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கோவிலுக்கு வந்தனர். அமைச்சர் முத்துசாமி வணக்கம் தெரிவிக்க, அவரை முன்னாள் அமைச்சர் தங்கமணி கை கொடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், இருவரும் இணைந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தை அமைச்சர் முத்துசாமி மற்றும் தங்கமணி அரைமணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு இருவரும் தனித்தனியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி

இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நீண்டகாலமாக பூட்டி இருந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திறந்துள்ளது. கோவில் வளாகத்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொகுதியின் எம்.எல்.ஏ தங்கமணியுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அரசியல் எதுவும் பேசவில்லை" என்றார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் அங்கிருந்து வருவார்கள் என்று கூறிய நிலையில், அமைச்சர் முத்துசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து அரைமணி நேரம் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிய... மேலும் பார்க்க

``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..?" - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்ச... மேலும் பார்க்க

பகவத் கீதை: "மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல்" - ரஷ்யப் பிரதமர் புதினுக்கு மோடி பரிசு

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதற்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பல்வேறு கட்ட முயற்... மேலும் பார்க்க