அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் - வேளாண்மை துறை அமைச்சர் ...
மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்யவந்த நீதிமன்ற பணியாளர்கள் – காரணம் என்ன?
மதுரை மாவட்டம், உத்தங்குடி நீதிமன்றம் அருகேயுள்ள அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் ட்ரஸ்ட் சார்பில் இரண்டரை ஏக்கர் நிலமானது, கடந்த 2004-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் கையகப்படுத்தபட்டது. ஆனால் இந்த நிலத்திற்கு 2022-ம் ஆண்டு வரையில் இழப்பீடு தொகையான 2 கோடியே 42 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை.
இதனால் மனுதாரர் லெட்சுமணன் தரப்பில் மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், `மதுரை மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை நில கையகப்படுத்தல் பிரிவு மாவட்ட வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, நில கையகப்படுத்தும் அலுவலர் ஆகியோர் மனுதாரருக்கு இழப்பீட்டு் தொகை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மனுதாரருக்கான மூன்றரை கோடி அளவிற்கான இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கார் உள்ளிட்ட 13 கார்கள், நூறு கணினிகள், 20 லேப்டாப்கள், 200 பீரோக்கள், 200 நாற்காலிகள், ஜெராக்ஸ் பிரிண்டர் , ஏசி உள்ளிட்டவற்றை ஜப்தி செய்வதற்காக மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரின் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்களில் ஜப்தி நோட்டீஸ் ஓட்டினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட அசையா பொருள்களை ஜப்தி செய்ய சென்றனர். பின்னர் மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒரு மாதம் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்கள் புறப்பட்டுச் சென்றனர்.



















