செய்திகள் :

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

post image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி கடந்த 30ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தளவாய் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் உள்ள லாரி செட் முன்பு அமர்ந்து சிலப்பனுர் கிராமத்தை சேர்ந்த மதிவாணன், தாமரைக்கண்ணன், பரிதி ஆகிய மூவரும் மது குடித்துள்ளனர்.

போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள்

இதைப் பார்த்த ராஜகண்ணுவும், வெங்கடேசனும் ராத்திரி 12 மணி ஆகி விட்டது, இன்னும் மது குடித்து கொண்டுள்ளீர்கள் உடனே இங்கிருந்து வீட்டுக்கு கிளம்ப வேண்டும், நாங்க திரும்பி வரும் போது மூணு பேரும் இங்க இருக்க கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து ரோந்தை முடித்து விட்டு அதிகாலை 2 மணி அளவில் இருவரும் திரும்பி வந்துள்ளனர். அப்போது, விநாயகர் கோயில் அருகில் உள்ள மரப்பட்டறை சந்தில் அமர்ந்து மூவரும் மது குடிப்பதை தொடர்ந்துள்ளனர்.

இதைப் பார்த்த போலீஸார், ஏற்கனவே வீட்டுக்கு கிளம்புங்கனு சொல்லிட்டு போன பிறகும் போகாமல் இன்னும் குடிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்டுள்ளனர். நிலை கொள்ளாத போதையில் இருந்த மூவரும் நாங்க இங்கு உட்கார்ந்து குடிப்போம், உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கங்க என்று கூறி சண்டை போட்டதுடன் இரண்டு போலீஸாரையும் மரியாதை குறைச்சலாக பேசியுள்ளனர்.

சிகிச்சையில் இருந்த வெங்கடேசன்

இதையடுத்து ராஜாகண்ணு காவல் நிலையத்தில் உள்ள போலீஸாருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, மூன்று பேரும் போலீஸ் ராஜாகண்ணு, ஊர்காவல் படை வீரர் வெங்கடேசனையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது வெங்கடேசன், போலீஸ் மீது கை வைக்கிறீங்களா? என்று கேட்க, போலீஸ்னா பயமா என்று கேட்டதுடன் வெங்கடேசன் முகம் மற்றும் தலையில் அடித்துள்ளனர். வலி தாங்காமல் வெங்கடேசன் கத்தியும் கேட்காமல் தொடர்ந்து அடிக்க அப்படியே மயங்கி விழுந்து விட்டார். ராஜாகண்ணுவை அவரது இரு கைகளையும் முறுக்கி அடித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டேஷனிலிருந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தாக்குதலுக்குள்ளான இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். போலீஸாரை தாக்கிய மூவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் ரூ.36 கோடி பணம், தங்கம் கொள்ளை; 17 கிமீ விரட்டிச்சென்று கொள்ளையர்களைப் பிடித்த மக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் அருகில் உள்ள போகர் என்ற கிராமத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குள் மாலை 2.45 மணிக்கு ஹெல்மெட் அணிந்த நான்கு கொள்ளையர்கள் திடீரென நுழைந்தனர். அவர்கள் நுழைந்த நேரத... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: எத்தனை பேர் கைது? அடையாள அணிவகுப்பு, LoC நோட்டீஸ் - காவல்துறையின் முழு விளக்கம்

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம் வீரமணி உள்ளிட்டவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. யார் யார் கைது? "சென்னை பெருநக... மேலும் பார்க்க

ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

நேற்று முன்தினம் (அக்டோபர் 31) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.ஆசிரியர் பாடம் எடுத்த... மேலும் பார்க்க

IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில்... மேலும் பார்க்க