செய்திகள் :

"மனைவி இல்லாமல் எப்படி வாழ்வேன்?" - மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் எடுத்த விபரீத முடிவு

post image

திருச்சி மாவட்டம், துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது: 71). இவரது மனைவி கண்ணம்மாள். இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத சூழலில், திடீரென்று இறந்தார்.

இந்நிலையில், மனைவி மீது அளவற்ற பாசம் வைத்திருந்த அவரது கணவரான பாபுராஜால், மனைவி பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் அல்லாடி வந்திருக்கிறார்.

இந்தக் கவலையில் அவரது உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சைக்குப் பிறகு பாபுராஜ் தனது வீட்டில் இருந்தார். இந்த நிலையில், வீட்டில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

trichy

மீண்டும் உறவினர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாபுராஜ் விஷம் குடித்து இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக இருங்கலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பாபுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, அவரது மகன் சரவணக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் துறையூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க