`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழ...
`மன அழுத்தத்திற்கு குட்பை!' ஜென் Z இளைஞர்களை ஈர்க்கும் ஜப்பானிய `வாபி ஷாபி' தத்துவம் - அது என்ன?
சமூக வலைதளங்களில் எப்போதும் பாசிட்டிவான விஷயங்களை அல்லது வாழ்க்கையை மட்டுமே காட்ட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில், ஒரு புதிய தத்துவம் இளைய தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வருகிறது.
அதுதான் ஜப்பானின் ‘வாபி–ஷாபி’ (Wabi-Sabi) என்ற தத்துவம்.. தற்போது இது ஜென் Z தலைமுறையினரிடம் பரவி வருகிறது. அதாவது குறைகளை அழகாகக் கருதி, இயற்கையான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொடுக்கும் இந்த தத்துவம், ஜென் Z தலைமுறையினரிடம் புதிய ட்ரெண்டாக உருவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமிலும் டிக்டாக்கிலும் ஃபில்டர் போட்ட புகைப்படங்களும், பாசிட்டிவான வாழ்க்கை முறைகளை மட்டுமே காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான இளைஞர்கள், இப்போது 'வாபி-ஷாபி' என்ற தத்துவத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
"எதுவும் பெர்ஃபெக்ட் இல்லை, குறைகளே இயல்பு, அதுவும் அழகுதான்" என்ற இந்த தத்துவம் தற்போது ட்ரெண்ட் ஆனாலும் இது 400 ஆண்டுகள் பழமையான தத்துவம் தான், மீண்டும் இது இந்தாண்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
'வாபி-ஷாபி'
'வாபி-ஷாபி' என்பது ஜப்பானிய பௌத்தத்திலிருந்து உருவான ஒரு வாழ்க்கை முறை தத்துவம் என கூறப்படுகிறது. வாபி என்பதன் பொருள், குறைந்த வசதிகளோடு, எளிமையாக வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பது ஆகும்.
ஷாபி என்பதன் பொருள், காலம் செல்லச் செல்ல மனிதர்களுக்கும் ஏற்படும் மாற்றங்கள், குறைகள் ஆகியவற்றை அழகாகப் பார்ப்பது ஆகும்.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் "பெர்ஃபெக்ஷன்" என்று பரவி வந்த கலாச்சாரத்திற்கு எதிர்வினையாக ஜென் Z இளைஞர்கள் 'வாபி-ஷாபி' தத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவுவது எப்படி?
டிக்டாக்கில் பயனர்கள் #my wabi-sabi என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையின் உண்மையான பக்கங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கலைந்த படுக்கையறை, பழைய புத்தகம், செல்லப் பிராணியின் சேட்டைகள் என ஃபில்டர் செய்யப்படாத யதார்த்தமான காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். இது மற்றவர்களுக்கு "எல்லோரும் இப்படி தான் இயல்பாக இருக்கிறார்கள்" என்ற நம்பிக்கையை அளிக்க உதவுகிறது. இந்த ட்ரெண்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்!



















