செய்திகள் :

மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

post image

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்தில், மாநில குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த மே 20 அன்று, மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகரிடம் சோவன்தேப் சட்டோபாத்யாயவை எதிர்க்கட்சித் தலைவராகப் பரிந்துரைத்து திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடிதத்தில் தங்களது கையெழுத்துக்கள் போலியாகப் போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களான ரிதாபர்தா பானர்ஜி மற்றும் சந்திபன் சஹா ஆகியோர் புகார் கூறினர். இந்த புகாரைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த மோசடி புகார் தொடர்பாக கொல்கத்தாவின் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டு, பின்னர் இந்த வழக்கு சிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு சிஐடி தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி நேரில் ஆஜராகாமல், விசாரணைக்கு 15 நாள்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொல்கத்தாவின் '30B, ஹரிஷ் சாட்டர்ஜி தெரு' பகுதியில் அமைந்துள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்திற்குச் சென்ற சிஐடி அதிகாரிகள், இந்த முகவரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாகவும் செயல்படுவதால், வளாகத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். இதற்கு அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே சில நிமிடங்கள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், இறுதியாக சிஐடி குழுவினர் வளாகத்திற்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

அபிஷேக்குடன் மம்தா பானர்ஜி
அபிஷேக்குடன் மம்தா பானர்ஜி

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷிஷ் சக்ரவர்த்தி கூறுகையில், "தற்போது மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியோ வீட்டில் இல்லை. எனவே, அவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இருக்கும்போது, ஓரிரு நாள்கள் கழித்து வருமாறு அதிகாரிகளிடம் கோரினோம். ஆனால், சிஐடி அதிகாரிகள் இதனை மறுத்ததோடு நான் இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்" என்றார்.

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் - எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை ஒன்று செயல்படுதையும், அதனால் மக்கள் பேருந்திற்கு மிகுந்த அச்சத்துடன் அமர்வதற்கு இடமின்றி நிறுத்ததில... மேலும் பார்க்க