செய்திகள் :

மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து நகை திருட்டு; கோவையில் அதிர்ச்சி சம்பவம்

post image

கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். இவர் கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழத்தார். இதனையடுத்து சௌரிபாளையம் மயானத்தில் நாகராஜன் உடலை, அவரது மகன் வெங்கடேஷ் அடக்கம் செய்தார்.

அப்போது தனது தந்தை மிகுந்த விருப்பத்துடன் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை அவரது உடலிலேயே அணிவித்து வெங்கடேஷ் புதைத்துள்ளார். 16 வது நாள் காரியம் முடிந்த பின்னர் கல்லறை கட்டி கொள்ளலாம் எனத் திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளி கிழமை 16 வது நாள் காரியத்துக்கு இடத்தைச் சுத்தம் செய்ய வந்தபோது, புதைக்கபட்ட இடம் தோண்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மயானத்தில் இருக்கும் கார்த்திக் என்பவரைப் பிடித்து அடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது, சக்திவேல் என்பவர் சிலருடன் கடத்த செவ்வாய் கிழமையன்று வந்து சடலத்தைத் தோண்டி எடுத்து 3.5 சவரன் நகையை மட்டும் கார்த்தி தூக்கிச் சென்று இருப்பது தெரியவந்தது. சக்திவேல் உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதும் தெரியவந்தது.

நாகராஜ்
நாகராஜ்

இதனைத் தொடர்ந்து  சடலத்தைத் தோண்டி எடுத்து நகையினைத் திருடி சென்றது தொடர்பாக வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், சக்திவேல், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது BNS 315 என்ற இறந்த நபரின் சொத்தைச் சட்டவிரோதமாகத் தனக்காகப் பயன்படுத்துதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதே போல கைதான மணிகண்டன் அளித்த புகாரில், தங்க சங்கிலியைக் குறித்து கேட்டு தன்னைத் தாக்கியதாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மணி, ரஞ்சித், கார்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி?

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த நீட் தேர்வுக்க... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் கொலை; தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

கோவை சாய் பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், 3 வயதில் வர்ஷினி என்ற மகளும் இருந்தனர். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரித்து சென்ற நிலையில்... மேலும் பார்க்க

சிவகாசி: பிரசவத்தின்போது ஏட்டுவின் மனைவி சிசுவுடன் உயிரிழப்பு; போராட்டம் நடத்திய உறவினர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் ஊழியர் பாக்கியராஜ் ஆனந்தவள்ளி தம்பதியரின் மகள் ரேணுகா தேவி. இவரது கணவர் தினேஷ், தூத்துக்குடி மாவட்டம் செய்து... மேலும் பார்க்க

ஆபாசப் பட மோகம்; 9 மாதக் குழந்தையைக் கடத்திப் பாலியல் கொடுமைசெய்த 12 வயது சிறுவன் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகில் குலாரிஹா என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 9 மாத மகளை தங்களது அருகில் படுக்க வைத்துவிட்டு உறங்கினர். அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தையைக் க... மேலும் பார்க்க

வெளியேறிய மணமகள்; மணமேடை ஏற்றப்பட்ட 13 வயது சகோதரி - மொட்டை கடிதத்தால் நிறுத்தப்பட்ட திருமணம்!

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயதான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக போலீஸ் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. 13 வயது மாணவியின் மூத்த... மேலும் பார்க்க

`ஆண் குழந்தை ரூ.7-8 லட்சம்.. பெண் குழந்தை ரூ.3-4 லட்சம்'- டெல்லியை அதிரவைத்த குழந்தை கடத்தல் கும்பல்

டெல்லியில் மத்திய பகுதியில் உள்ள பாஹர்கஞ்ச் பகுதியில் அடிக்கடி ஒரு பெண் வேறு வேறு குழந்தைகளுடன் நடமாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அத்தகவலின் அடிப்படையில் அது குறித்து விசாரி... மேலும் பார்க்க