செய்திகள் :

மயிலாடுதுறை: `ஓப்பன் பார்'ஆக மாறிய பஸ் ஸ்டாப்; அச்சத்தில் மக்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?!

post image

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கடைவீதி பகுதியில் மதுபானக்கடை ஒன்று, சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது

கூறைநாடு பகுதியானது பல்வேறு ஜவுளிக்கடைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், மொத்த வியாபாரம் செய்யும் பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பல்வேறு கடைகளை உள்ளடக்கிய மாவட்டத்தின் முக்கிய பகுதியாகும்.

கூறைநாடு பகுதியின் பேருந்து நிறுத்தத்துக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கும் மதுபானக்கடையால் பெரும் அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளையும் அவ்வப்போது சந்திக்கின்றனர்.

பேருந்து நிறுத்தம்

இது குறித்து அப்பகுதி மக்களிடையே பேசியபோது, ``இந்த டாஸ்மாக்க ஒட்டுன மாறித்தான் நாங்க பஸ்க்கு வெயிட் பண்ற இடம் இருக்கு. இந்த டாஸ்மாக் இல்லாதப்ப நாங்க எல்லாம் அங்கதான் பஸ் ஏற வெயிட் பண்ணுவோம்.

எப்ப இந்த டாஸ்மாக் வந்துச்சோ, அப்போவே இந்த பஸ்ஸ்டாப் குடிகாரர்களோட இடமாகிடுச்சு. நாங்க அந்த சைடு போறதே இல்ல. அங்கேயே கொஞ்சம் தள்ளிதான் பஸ் ஏற கால்கடுக்க நின்னுட்டு இருக்குறோம்.

பஸ் வர எவ்ளோ நேரம் ஆனாலும் நின்னுட்டு தான் இருக்குணும். பக்கத்துல குடிச்சிட்டு ஒரு மாதிரியா நடந்து வருவாங்க. அதையெல்லாம் பாக்கவே ரொம்ப பயமா இருக்கும்‌. பஸ் எல்லாமும் கொஞ்சம் தள்ளி நாங்க நிக்கிற இடத்துலதான் நிக்கும்.

சாயங்காலத்துக்கு மேல இங்க நின்னு பஸ் ஏறவே பயப்புடுவாங்க. ஏன்னா... அந்த டைம்ல இங்க நெறைய பேரு குடிச்சுட்டு பாட்டிலும் கையும்மா நிப்பாங்க. நைட் ஏழு, எட்டு மணிக்கெல்லாம் அக்கம் பக்கத்துல கடையில வேலை பாக்குற பெண்ணுங்க எல்லாம் வேலையை முடிச்சிட்டு பஸ் ஏற வருவாங்க.

தள்ளிச் சென்று காத்திருக்கும் மக்கள்

இங்க பஸ் ஸ்டாப்ல குடிச்சுட்டு இருக்குறவங்க, அந்தப் பிள்ளைங்கள கேலி கிண்டல் பண்ணி போதையில வம்பு பண்ணுவாங்க. அதனாலேயே, பஸ் வர்ற வரைக்கும் இருக்காம, ஆட்டோ பிடிச்சு கூட கிளம்பிருவாங்க. குடிச்சிட்டு வண்டிய ரோட்ட மறிச்சு நிப்பாட்டுறது, போதையில ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்குறதுன்னு ரொம்ப அட்டகாசம் பண்ணுவாங்க.

இந்த டாஸ்மாக் கடையில இருந்து 50 மீட்டர் தூரத்துல ஹாஸ்பிடல், 500 மீட்டர்க்குள்ளேயே மசூதி, ஸ்கூல்ன்னு எல்லாமே இருக்கு. புதுசா பதவியேத்த முதல்வர் விஜய் அரசு இந்த டாஸ்மாக் கடைகள் தொடர்பா அறிவிப்பு விட்டதும், நாங்க கொஞ்சம் நிம்மதி அடைஞ்சோம்.

அப்பர் சுந்தர்

ஆனா, அதிர்ச்சி தர விதமா... இந்த டாஸ்மாக் கடை அந்த லிஸ்ட்ல இல்லைன்னு சொல்லிட்டாங்க. அரசாங்கம் சொன்ன மாதிரி 500 மீட்டர் தூரத்துக்குள்ளவே தான் இந்தக் கடை இருக்கு. அப்படியிருந்தும் எதுக்கு மூடலைன்னு தெரியல... உடனடியாக இந்தக் கடையை மூட அரசு நடவடிக்கை எடுக்கணும். பழைய மாதிரி பஸ் ஸ்டாப்லயே காத்திருந்து பஸ் பிடிக்குற நிலைமை ஏற்படணும்" என்றனர்.

`ஓப்பன் பார்'ஆக மாறிய பஸ் ஸ்டாப்

அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பர் சுந்தர் பேசுகையில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய கடைவீதியில் ஒன்று கூறைநாடு. மதுபானக்கடையினால் அப்பகுதி மக்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துவருகின்றனர்.

மது போதையில் தள்ளாடியபடி செல்வோரால் இந்தப் பகுதியில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.ஐந்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டில் மட்டும் இந்த விபத்துகளால் இறந்துள்ளனர். முக்கியமாக பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, மதுபானக்கடையை இங்கிருந்து மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மதுபானக்கடையை புதிய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக மூட வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

'234 மாவட்டச் செயலாளர்கள்; முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் பரிசோதனை முயற்சி!'- விஜய்யின் அடுத்த பிளான்!

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முதலாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தவெக. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் சர்ப்ரைஸாக சில முடிவுகளும்... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டம்: `ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு டு நீட் எதிர்ப்பு...' - முதல்வர் விஜய் பேசியது என்ன?

நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாலை வரை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இதில... மேலும் பார்க்க

நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி! – `மக்களுக்கான துரோகம்’ எனச் சாடும் நாராயணசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின்வெட்டு: 'மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்' - எடப்பாடி பழனிசாமி!

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்கிற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தினம் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``KG படிக்கும் குழந்தை பேசுவதைப் போல..." - திமுக-வை சாடும் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்!

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தவெக அரசால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மேலிடப் பொருப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் இல்லத்துக்கு சென்றிருந்தார். அங... மேலும் பார்க்க

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! - டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டா... மேலும் பார்க்க