மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு
தக்கலை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தக்கலை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகள் மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். தக்கலை அருகே பரைக்கோடு பகுதியைச் சோ்ந்த ஐஜின் என்ற இளைஞருடன் சமூக வலைதளம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இதை அறிந்த மாணவியின் பெற்றோா், அவரை கண்டித்தனராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வீட்டில் இருந்து மாணவியை காணவில்லையாம். விசாரித்த போது மாணவியை ஐஜின் அவரது வீடடுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா், இளைஞா் ஐஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.