செய்திகள் :

முதல்வர் செயலக அலுவலகம் புதுபிப்பு: ரூ.5.54 கோடிக்கு டெண்டர்; `ரூ.3.78 கோடி போதும்' - ராசி பில்டர்ஸ்

post image

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதையொட்டி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது.

அதன்படி, 10-வது தளத்தில் பிளாக் 1-க்கு ரூ.2.41 கோடி, பிளாக் 2-க்கு ரூ.2.01 கோடி, பிளாக் 3-க்கு ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.

மேலும், பணியை 3 மாதங்களில் முடிக்கவும், பொதுப்பணித்துறையில் பதிவு பெற்ற தகுதியான ஒப்பந்தக்காரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நாமக்கள் கவிஞர் மாளிகை
நாமக்கள் கவிஞர் மாளிகை

மூன்று கட்டமைப்பு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த டெண்டர் போட்டியில் 5 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் தொழில்நுட்பத் தகுதி பூர்த்தி செய்யாததால் ‘யுடெக் இன்ஜினியரிங்’ நிறுவனம் ஆரம்பத்திலேயே தகுதியிழப்பு செய்யப்பட்டது.

ராசி பில்டர்ஸ் (சென்னை), ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (மதுரை), ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ், எம் கியூப் இன்ஃப்ரா (சென்னை) ஆகிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றான.

இந்த நிலையில், செயலக அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணியை சென்னையைச் சேர்ந்த ‘ராசி பில்டர்ஸ்’ (Raasi Builders) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பொதுப்பணித்துறை (PWD) நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாகக் அதாவது ரூ.3.78 கோடி குறிப்பிட்டு, குறைந்த தொகை கோரிய ‘L1’ நிறுவனமாக ராசி பில்டர்ஸ் தேர்வாகியுள்ளது.

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?' - கொதிப்பில் சீனியர்கள்!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில... மேலும் பார்க்க

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்துவருவதால், கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள். 'பாஜக-வை வீழ்த்துவதே நோக்கம்' என்பதை முதல்வர் வி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது எ... மேலும் பார்க்க

Mettur Dam: `93 ஆண்டுக்கால மேட்டூர் அணை வரலாற்றில் இது 62- வது‌ முறை!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றுப்படுகையின் உயிர் நாடியாக விளங்குகிறது, மேட்டூர் அணை. சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைந்துள்ள இந்த பிரமா... மேலும் பார்க்க

சேகர் பாபு, மா.சுப்பிரமணியனுக்கே முன்னுரிமை - கொதிப்பில் உதயநிதி! தலைநகர் திமுக-வில் என்ன நடக்கிறது?

தலைநகர் தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருந்தாலும், இன்னமும் சீனியர்கள் ஆதிக்கம் அதீதமாக இருப்பதாக குமுறத் தொடங்கியிருக்கிறார்கள் உதயநிதி ஆத... மேலும் பார்க்க

`சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்' - அதிமுக-வுக்கு தேர்தல் பணியாற்றிய நிறுவன ஊழியர்கள் வேதனை!

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மெய்நிகர் மீடியா நிறுவனம், நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரங்களை செய்து தரும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. சத்யமூர்த்த... மேலும் பார்க்க