தஞ்சாவூர்: 'மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம்? மகளிர் அணிக்கு வாட்ச் பரிசு' - புது ர...
முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி.
தனக்கு எதிராக களத்தில் நின்ற தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர், அ.தி.மு.க வேட்பாளர் பண்ணாரி உள்ளிட்ட வேட்பாளர்களை வீழ்த்தி மக்கள் ஆதரவுடன் பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் தொடங்கி அம்மா உணவகம் வரை பல்வேறு இடங்களிலும் எம்.எல்.ஏ என்கிற முறையில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஆய்வு செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பாடல்களுடன் ரீல்ஸாகப் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் வைத்து சாப்பிடும் எளிமையான எம்.எல்.ஏ என அவரின் ஆதரவாளர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
முதல்வர் பாணியில் சத்தியமங்கலம் எம்.எல்.ஏ என த.வெ.க- வினர் பகிர்ந்து வரும் அதேவேளையில், 'முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து முதல்வர் ஜோசப் விஜய் உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படங்களே ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டதுதான். ரீல்ஸ்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சமாவது தொகுதி மக்களின் தேவைக்குக் கொடுங்கள்' என எதிர்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.











