செய்திகள் :

முன்கூட்டியே வருகிறது பிக் பாஸ் சீசன் 10 ; தேதி விவரம்? - Bigg Boss Updates

post image

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.

2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.

முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்த‌ன.

நான்காவது சீசன் அதாவது கோவிட் சமயத்தில் ஒளிபரப்பு தாமதமாகி அக்டோபர் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது. அப்போது முதல் சென்ற ஆண்டு வரை அக்டோபர் முதல் வாரத்திலிருந்துதான் ஒளிபரப்பு தொடங்கி வந்தது. மறு வருடம் பொங்கல் பண்டிகையுடன் நிகழ்ச்சி நிறைவடையும்.

இந்நிலையில் இந்தாண்டு இதில் மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள்.

Bigg Boss Tamil House

அதாவது நிகழ்ச்சி தொடங்கும் வருடத்துக்குள்ளாகவே முடிக்கவிருக்கிறார்கள்.

அதன்படி இந்தாண்டு நிகழ்ச்சி தொடங்கும் தேதி தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 ஒளிபரப்பாகவிருக்கிறது.

அதிலிருந்து 105 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த வருடமும் நிகழ்ச்சியை விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களைத் தேடும் படலம் தொடங்கி விட்டது. டிவி, சினிமா, மாடலிங் என பல துறைகளிலும் இருக்கும் பலரிடமும் பேசி வருகிறார்களாம்.

ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் விகடன் தளத்தில் வெளியாவதை அற்வீர்கள்.

இந்தாண்டும் அதே எக்ஸ்க்ளூசிவ்களுக்கு விகடனோடு தொடர்பிலேயே இருங்கள்.!

`ஆபீஸ் போட்டு பிரதமர் பெயரைச் சொல்லி ஏமாத்துறாங்க; ஜஸ்ட்ல தப்பிச்சேன்' - சீரியல் நடிகர் நவீந்தர்

''நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிற சைபர் மோசடிகளில் யார் வேணூம்னாலும் ஏமாந்து போகலாம்கிற சூழல் இன்னைக்கு உருவாகிடுச்சு. டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், ஏமாத்தறவங்களுக்கும் தைரியம் எல்லை மீறி... மேலும் பார்க்க

Tv update: 'செகண்ட் லவ்' ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?

மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான 'ஆனந்த ராகம்' தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.அந்த தொடர் ஆயிரம் எப... மேலும் பார்க்க

"`எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்ல‌; தந்த வாக்குக்காக வர்றேன்'னு வந்தார் சாலமன் பாப்பையா"- மதுரை முத்து

மதுரை திருநகரில் இரண்டாவது நூலகத்தைத் திறந்துள்ளார், மதுரை முத்து. தன்னுடைய பூர்வீக கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நூலகத்தை நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நூலகத்தை சாலமன் பாப்பையாவை வைத்து திறந்து வைத்திர... மேலும் பார்க்க

`அப்பாவை ரஜினி சார் கூட்டி வரச் சொன்னார், அதுக்குள்ள...' - மனம் கலங்கும் `லொள்ளு சபா' ஜீவா

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. அடிப்படையில் நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தவர். சின்னத்திரையைத் தாண்டி சினிமா பக... மேலும் பார்க்க

’பிக்பாஸ் காமன்மேன்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகும் அந்த இருவர் யார் யார்?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 துவங்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் சூழலில், இந்த வருடம் புது முயற்சியாக ’பிக்பாஸ் காமன் மேன்’ என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த... மேலும் பார்க்க

Bigg Boss: இந்த வருஷம் இதெல்லாம் புதுசு! - `காமன்மேன்' பிக் பாஸ் ஷோவுக்கு யார் பாஸ்?

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார்.வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல் இந்த வருடம் நிகழ்ச்சியில் 0... மேலும் பார்க்க