செய்திகள் :

`முன்னுரிமை அடிப்படையில் குற்றங்களை கட்டுப்படுத்த..!'- புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

post image

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``எனக்கு இந்த உயரிய வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மக்களுக்குச் சேவை செய்வதற்கான இந்த வாய்ப்பை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்கும். குறிப்பாக, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மகேஷ் குமார் அகர்வால் - முதல்வர் விஜய்
மகேஷ் குமார் அகர்வால் - முதல்வர் விஜய்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சமரசமின்றிச் செயல்படும். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் துறையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும். வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள சைபர் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறையின் இந்த அதிரடி முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றிபெற வேண்டும் என்றால், அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். காவல்துறையின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் தங்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க