செய்திகள் :

மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?

post image

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இந்த உணவு குறித்து சில நேரங்களில் விமர்சனம் எழுவதுண்டு.

இந்நிலையில், மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டில் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பயணிக்குக் கொடுக்கப்பட்ட பருப்பு குழம்பில் பூச்சி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை அப்பயணி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு மட்டுமல்லாது தான் பயணம் செய்த பெட்டியில் இருந்த வேறு சிலரது உணவிலும் இது போன்று பூச்சி இருந்ததாக அந்தப் பயணி பதிவிட்டுள்ளார்.

உணவில் பூச்சி
உணவில் பூச்சி

அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் யாரும் சாப்பிட மறுத்துவிட்டனர். இது தொடர்பான சமூக வலைத்தளப் பக்க பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி பதிலளித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ரயிலில் உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதோடு அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு அந்த ஒப்பந்ததாரர் உணவு தயாரிக்கும் சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் ரயிலில் இது போன்று சாப்பாட்டில் பூச்சிகள் இருப்பது பயனிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதே போன்று வாரனாசியில் இருந்து தியோகர் நகருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரயிலில் வழங்கபட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டதால் தனக்கு அலர்ஜி ஏற்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பயணத்தின் போது வழங்கப்பட்ட சாப்பாட்டைச் சாப்பிட்ட தனது இரண்டு வயது மகன் நோய்வாய்ப்பட்டதாகவும், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைனில் பகிரப்பட்ட படங்களில், மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், வீங்கிய உதடுகளுடன் அப்பெண் தனது படத்தைப் பகிர்ந்து இருந்தார். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு Vs மத்திய குழு; சிம்பன்சிகளிடையே வெடித்த `சிவில் வார்!' - உகாண்டாவில் அதிர்ச்சி!

சுமார் 25 ஆண்டுகளாக உகாண்டாவின் ங்கோகோ (Ngogo) காடுகளில் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சமூகம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது.சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்த மாபெரும் கூட்டம், ஒரு முன்மாதிரி சமூ... மேலும் பார்க்க

விராட் கோலி போட்ட லைக்; இணையத்தில் வைரலாகும் LizLaz - யார் இவர்?

இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்ப... மேலும் பார்க்க

ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அ... மேலும் பார்க்க

`பேய் நடமாட்டம்' - மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - சிவசேனா அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசு... மேலும் பார்க்க

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய... மேலும் பார்க்க

`நினைவு குறைந்துவிட்டது' முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மூளை பக்கவாதம் - நண்பர் தகவல்

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி 1990களில் அதிக அளவில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் வினோத் காம்ப்ளி, மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசி... மேலும் பார்க்க