செய்திகள் :

மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய எம்பாப்பே - நாக்அவுட் சுற்றின் புதிய `சுல்தான்'

post image

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) புதிய உலக சாதனைகளைப் படைத்து சரித்திரம் எழுதி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை நடந்த Round 32 தகுதிச் சுற்றில், சுவீடன் அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் 28 வயதான எம்பாப்பே அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசவை (17 கோல்கள்) முந்தி, தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளார்.

உலகக் கோப்பையின் நாக்-அவுட் (Knockout) சுற்றுகளில் மட்டும் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் எம்பாப்பே இப்போது 10 கோல்களுடன் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

லியோனல் மெஸ்ஸி

இதற்கு முன்பு பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ மற்றும் லியோனிடாஸ் ஆகியோர் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தனர். பிரான்சின் ஜஸ்ட் ஃபோன்டைன் மற்றும் பிரேசிலின் பீலே ஆகியோர் தலா 7 கோல்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தற்போது எம்பாப்பே இவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் 19 கோல்களுடன் ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரராக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி திகழ்கிறார். ஆனால், அவர் நாக்-அவுட் சுற்றுகளில் 5 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார். அதேபோல், நடப்பு தொடரில் எம்பாப்பே அடித்துள்ள 6 கோல்கள், Golden Boot விருதுக்கான போட்டியில் அவரை மெஸ்ஸியுடன் சமநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது உலகக் கோப்பை வரலாற்றில் நாக்-அவுட் சுற்றில் இதுவரை ஒரு கோல் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ

சுவீடன் அணியின் பலமான தடுப்பாட்டத்தை உடைத்து, மைக்கேல் ஒலிசேயின் (Michael Olise) அசிஸ்ட்கள் உதவியுடன் எம்பாப்பே இந்த இரண்டு கோல்களையும் அடித்தார். 1998 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குக் பிறகு நாக்-அவுட் சுற்றில் பிரான்ஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

"நாம் ஒரு வரலாற்றை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று பிரான்ஸ் அணியின் மேலாளர் டிடியர் டெசாம்ப்ஸ் எம்பாப்பேயைப் பாராட்டியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி, ஜூலை 4-ம் தேதி நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (Round of 16) பராகுவே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Mr Beast & Cristiano Ronaldo: `ரொனால்டோ மிகச்சிறந்த மனிதர்' - நெகிழும் மிஸ்டர் பீஸ்ட்!

யூடியூப் உலகின் முடிசூடா மன்னன் மிஸ்டர் பீஸ்ட் (MrBeast). யூடியூப் தளத்தில் 500 மில்லியன் (50 கோடி) சந்தாதாரர்களைக் கடந்த முதல் தனிநபர் படைப்பாளி என்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர். அதுபோல், உலகெங... மேலும் பார்க்க

மும்பை டு ராஜஸ்தான் : அணி மாறும் ஹர்திக்? - டிரேடிங்கில் மும்பை கேட்கும் வீரர் யார்?

ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கி... மேலும் பார்க்க

FIFA 2026: பீர் தீர்ந்தது, நகரம் அதிர்ந்தது - 28 வருட ஏக்கத்தைக் கொண்டாடிய ஸ்காட்லாந்து ரசிகர்கள்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழாவின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுதான் இது. கால்பந்து என்றாலே கொண்டாட்டம... மேலும் பார்க்க

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூ... மேலும் பார்க்க

FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 'Group L' பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங... மேலும் பார்க்க

தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!

இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா. குரூப் A, குரூப் B என மொத்தம் 12 அணிகள் களம் காணும் இந்தத் தொடரில், ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கையோடு இருபது ... மேலும் பார்க்க