செய்திகள் :

மே 17 நினைவேந்தல்: `இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அழுத்தம் தர வேண்டும்' - திருமுருகன் காந்தி

post image

2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், பல்வேறு தமிழ்த்தேசிய - திராவிட இயக்கங்களும் இனப்படுகொலை நாளுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது வாடிக்கை.

அவ்வகையில், மே17 இயக்கம் நேற்று (17.05.2026) மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில், தொடர்ச்சியாக 17 வது ஆண்டாக இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது.

நிகழ்வின் தொடக்கமாக, மையம் கலைக்குழுவினரால்  பறையிசை முழக்கப்பட்டது.

அடுத்ததாக, இளம் வயது பெண்கள் குழுவினர் தமிழீழப் போராட்டத்தை போற்றும் பாடலொன்றை பாடினர்.

அதன் தொடர்ச்சியாக பேசிய, மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, மே 18 அன்று இனப்படுகொலை நாளை தமிழர்கள் அனுசரிக்க வேண்டியதன் அவசியத்தை கூறியதோடு, "முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான்" என அங்கீகரித்து அதில் ஈடுபட்ட இலங்கையையும் உதவிய இன்னபிற நாடுகளையும் போர்க்குற்றவாளியாக அறிவிக்க ஐ.நா சபை முன்னெடுப்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

தொடர்ச்சியாக பேசியவர், முள்ளிவாய்க்காலில், இலங்கை இராணுவம் நிகழ்த்திய, மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை, பெண்கள், குழந்தைகள் மீதான கரிசனமற்ற கடும் தாக்குதல்களை பட்டியலிட்டு அம்மிகப்பெரிய அநீதிக்கெதிராக உலகம் மௌனம் காத்த அவலம் குறித்து வருந்தினார்.

அத்துடன், தமிழ்நாட்டு தமிழர்களும் அதை தடுக்க முடியாமல் பரிதவித்த ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டார்.

இனியாவது, உலகத் தமிழர்கள் விழித்துக்கொண்டு இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உலக நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அழுத்தம் தர வேண்டும். இலங்கை, பேரினவாத அரசின் வன்முறைகளிலிருந்து ஈழத்தமிழர்கள் நிரந்தர விடுதலையடைய "தனித் தமிழீழமே ஒரே தீர்வு" அதை, பெற்றுத்தர, அங்கீகரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பின்னர், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் சுடரேற்றினர்.

அங்கு, கூடியிருந்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்களும் கையில் மெழுகேற்றியும், அலைபேசியில் டார்ச் அடித்தும் "தமிழீழமே ஒரே தீர்வு. தமிழீழம் மலரட்டும்" என்றெல்லாம் முழக்கம் எழுப்பி இனப்படுகொலையில் இறந்துபோன ஈழத்தமிழர்க்கு வீரவணக்கம் செலுத்தினர்.

இறுதியாக, மணற்மேட்டில் பதிக்கப்பட்டிருந்த பாலசந்திரன் புகைப்படத்திற்கு ஒவ்வொருவராக மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

- இராகுல் லட்சுமி

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் - நிம்மதியடைந்த பொதுமக்கள்!

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.அவற்றுள் மிகவும் கவனம் ப... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ - திமுக - காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும்... மேலும் பார்க்க

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க

`முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முடிவு செய்தார்களா?' - திமுக, அதிமுக கூட்டணி குறித்து திருமா

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

`பூத் ஏஜென்ட், ஏன் கவுண்டிங் ஏஜென்ட் கூட இல்லாமல் வெற்றி; இது நம் கண்ணுக்குத் தெரியவில்லை'- ஸ்டாலின்

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க