`கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டி...
"மொழி டாக்ஸிக் ஆக மாறக்கூடாது; எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.!"- கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் NDTV நடத்திய தமிழ்நாடு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நேற்று (ஜன.30) கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த கருத்தரங்கில் மொழி குறித்து பேசிய அவர், " அன்பு ஒரு போதும் விஷமாக மாறக்கூடாது. மொழியும் அப்படிதான் அது டாக்ஸிக் ஆக மாறக்கூடாது.
என்னிடம் யாரும் மொழியும் திணிக்க முடியாது.
நான் 27 வயது வரை இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவே இல்லை.

ஒரு வார்த்தைக்கூட எனக்கு தெரியாது. பிறகு பேசும் அளவிற்கு இந்திக் கற்றுக்கொண்டேன். ஆனாலும் இந்தி எழுதத் தெரியாது.
நான் மூன்று மொழிகளில் நன்கு பரிட்சயம் பெற்றவன். ஒன்று தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது சினிமா.
சினிமாமாவால் எல்லா மொழியும் பேச முடியும். மொழி என் பண்பாட்டுப் பெருமை.
என் மொழியை நேசிக்க, நான் பிற மொழியை வெறுக்க வேண்டியதில்லை. எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.

அந்த முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள். வாழ்க்கைக்கு தேவை என்றால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.












