செய்திகள் :

'ரகசிய ஷேவிங், பாலியல் ஆசைக்கு மறுப்பு' - பெண் வேடமிட்டு ஆணை மணந்த நபருக்கு நடந்த விபரீதம்

post image

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தனர். பியூஷுடன் அவரது மனைவி மத ரீதியான விரதங்களைக் காரணமாகக் கூறி, உடல் ரீதியான நெருக்கத்தைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். திருமணச் சடங்கின் ஒரு பகுதியாக நெற்றியில் குங்குமம் இட்டு பியூஷ் மனைவி வாழ்ந்தார்.

ஆனால் பியூஷ் தனது மனைவி வீட்டில் ரகசியமாக முகச்சவரம் செய்வதைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அவர் தனது மனைவி உண்மையில் ஒரு ஆண் என்பதையும், அவர் ஒரு ஓரினச்சேர்க்கை உறவை விரும்புபவர் என்பதையும் பியூஷ் அப்போதுதான் கண்டுபிடித்தார்.

இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பெண்ணாக வாழ்ந்த நபரின் பெயர் சந்தன் என்று தெரிய வந்தது. இச்சண்டையால் அவர்கள் பியூஷ், சந்தனை விட்டு பிரிந்து சென்றார். ஆனால் பியூஷ் செல்லும் இடமெல்லாம் சந்தன் சென்றார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என்று விரட்டிசென்று இறுதியாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பியூஷை சந்தன் கண்டுபிடித்தார். பியூஷ் வேலை செய்த இடத்தில் சென்று சந்தன் வாக்குவாதம் சென்றார். இதையடுத்து சந்தனை பியூஷ் தனியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத ரயில் தண்டவாளம் இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சந்தனை மிகப்பெரிய கல் ஒன்றை எடுத்து தாக்கி பியூஷ் கொலை செய்தார். பின்னர் உடலை அங்கிருந்த பாறை மறைவில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் இரண்டு நாள்கள் கழித்த நிலையில் சந்தன் உடல் அழுகிய நிலையில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தன் பெண்கள் அணியும் ஆடையை அணிந்தபடி இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அங்கு பியூஷ் மற்றும் சந்தன் வந்த காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பியூஷைப் பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். சந்தன், பீகாரைச் சேர்ந்தவர் ஆவார்.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க