செய்திகள் :

ரத்தவெள்ளத்தில் கணவன்; உயிருக்குப் போராடிய மகன்; போனை பார்த்துகொண்டிருந்த தாய்; பெங்களூருவில் பகீர்

post image

கர்நாடகா மாநிலம் தார்வாடு என்ற இடத்தில் வசித்தவர் டாக்டர் கிரண். இவரது மனைவி பிரியங்கா. இவரும் டாக்டர் ஆவார். இத்தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கிரண் உறவினர்கள் அடிக்கடி டாக்டர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

நேற்று கிரணின் உறவினர்கள் கிரணை போனில் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கிரண் மனைவியைத் தொடர்பு கொண்டனர். ஆனால் பிரியங்கா தனது கணவர் உறங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். அதன் பிறகு மாலையில் தொடர்பு கொண்டபோது அவர் வேலைக்குச் சென்றுவிட்டதாக பிரியங்கா தெரிவித்தார்.

கிரணை போனில் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து உறவினர்கள் நேரடியாக கிரணைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்தனர். வீட்டில் கிரண் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சற்று தூரத்தில் 8 வயது மகன் கத்திக்குத்துக்காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான்.

உடனே அவர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், ஹுப்பள்ளி-தார்வாட் போலீஸ் கமிஷனர் என். சசிகுமார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த சிறுவன் இன்னும் சுவாசித்துக்கொண்டிருப்பதைக் கவனித்து, அவனை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார்.

இது குறித்து சசிகுமார் கூறுகையில், ''ஒரு அறையில் டாக்டர் கிரண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 8 வயது சிறுவனும் கத்தியால் குத்தப்பட்டிருந்தான். அந்தச் சிறுவன் சரியாக எப்போது தாக்கப்பட்டான் என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவன் உயிருடன் இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றினோம்.

சம்பவம் எப்போது நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது அதிர்ச்சியில் இருக்கும் டாக்டர் மனைவி முன்னுக்குப் பின் முரணான மற்றும் வழக்கத்திற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

கொலைக்கான காரணத்தை அறிய இரு குடும்பத்தினரிடமிருந்தும் விவரங்களைச் சேகரித்து வருகிறோம்'' என்றார்.

முதற்கட்ட விசாரணையின்படி, சம்பவத்தின்போது அந்த வீட்டில் கணவர், மனைவி மற்றும் குழந்தை மட்டுமே இருந்துள்ளனர். வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்றும் அவர் கூறினார். கணவர் மற்றும் மகனின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவரது மனைவி தரையில் படுத்துக்கொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

இந்தக் கொலையில் டாக்டர் பிரியங்காவுக்குத் தொடர்பு இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள போதிலும், போலீசார் அவர்களது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விருதுநகர்: நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு - இளம்பெண்ணையும், தாயையும் வெட்டிய மணமகன்

விருதுநகரில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளார். இதில் பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்... மேலும் பார்க்க

"நான் திவ்யா பேசுறேன்.!" - ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்; ரூ.21 கோடி இழந்த ஆடிட்டர் - முழுப் பின்னணி!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது மூத்த ஆடிட்டர் (CA) அசோக் விஜயவர்கியா. இவர் மத்தியப் பிரதேச வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த... மேலும் பார்க்க

லாக்கப் மரணம்: 'தலையில் ரத்தக்கட்டு, கழுத்தில் காயம்' - கடும் தாக்குதலால் கொல்லப்பட்ட சபரி வர்மன்

நாகர்கோவில் கிளைச் சிறையில் சபரிவர்மன் (34) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர... மேலும் பார்க்க

சபரி வர்மன் லாக்கப் மரணம்: 'மனைவிக்கு அரசு வேலை வழங்க உறுதி' - கடைசிவரை போராடிய திமுக எம்.எல்.ஏ

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34) சிறையில் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர்... மேலும் பார்க்க

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இன்ஜினியர் சுஜி பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன்னைக் காத... மேலும் பார்க்க

நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி - 3 வார்டன்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34). வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கட... மேலும் பார்க்க