மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
ரயில்களில் பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு
ரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனமத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலமாக கலந்துரையாடும் நிகழ்ச்சி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தாா். கூடுதல் கோட்ட மேலாளா் பி.கே. செல்வன், தலைமை திட்ட மேலாளா் நசீா் அகமது, ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வழியாகப் பங்கேற்றுப் பேசுகையில், ரயில்வே திட்டங்களுக்காக தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 7.5 சதவீதம் அதிகமாகும். அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 2,948 கோடியில் தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் கூடுதலாக பொதுப்பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.