செய்திகள் :

`ராகுல் காந்தி தளபதியின் கைப்பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்' - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

post image

தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், 2029-ம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக இருப்பார் எனக் தவெக தரப்பிலிருந்து அழுத்தமாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் - தவெக என இருகட்சிகளுக்கிடையே கருத்து மோதலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாடு அரசியலில் சமீப நாட்களாகத் தளபதி தான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டிலும் இதே போன்ற விவாதங்கள் எழுந்தபோது, 2026-ல் என்ன நடக்கும் என்று நான் கணித்து முதல்வராக தளபதிதான் வருவார் என்றேன்.

அதுதான் நடந்தது.

ராகுல் காந்தி, விஜய்
ராகுல் காந்தி, விஜய்

அதேபோல, வரும் 2029-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மிக முக்கிய மாற்றங்கள் நடக்கும். குறிப்பாக, நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யப்போவது இல்லை. மாறாக, தமிழ்நாடுதான் அதை முடிவு செய்யப்போகிறது. 2029-ல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை நாடு பார்க்கப்போகிறது. தற்போதைய சூழலில், ராகுலை ஏற்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்த பேச்சுக்கள் எழுந்தாலும், 2029 தேர்தலுக்குப் பிறகுதான் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரியும்.

தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் கைபிடித்து அமர வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2029-ம் ஆண்டிலும் அவரே தளபதியின் கரங்களைப் பிடித்து டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார். இதை ஆணித்தரமாக சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் அப்போது யார் முதல்வராக இருப்பர் என்பதை அப்போது பார்க்கலாம்." என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க