செய்திகள் :

'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

post image

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி... தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

சரியாக இரண்டரை ஆண்டுகள் கழித்து, டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற குரல்கள் கர்நாடகாவில் எழத் தொடங்கின.

அந்தக் குரல்களை 'தலைமை முடிவு செய்யும்' என்கிற ஒற்றைப் பதிலால் கடந்து சென்றார் சித்தராமையா. இதில் டி.கே.சிவக்குமாருக்கு உடன்பாடில்லை என்றாலும், அவரும் இதே பதிலைத் தான் கூறி வந்தார்.

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்
சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் 'கர்நாடகா முதல்வர் யார்?' என்கிற தொடர் சந்திப்புகளும், கூட்டங்களும் நடந்துகொண்டே இருந்தன.

அதன் முடிவில், சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன் படி, இன்று அவரது வீட்டில் நடந்த காலை விருந்திற்குப் பிறகு தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளை டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள சித்தராமையாவிற்கு ராஜ்ய சபா சீட்டும், அவரது மகனுக்கு மாநிலத்தில் அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட உள்ளது எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க