செய்திகள் :

ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

post image

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார்.

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

'மைசா'
'மைசா'

இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியப் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது.

நடனமாடிக் கொண்டிருந்தபோது, ராஷ்மிகா மந்தனா எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். கீழே விழுந்ததில் அவருக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தது 6 வாரங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, சமீபத்தில்தான் அவர் மிகக் கடினமான சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாடல் படப்பிடிப்பின்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

"விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ..." - ஆனந்த் தேவரகொண்டா

'தொரசானி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆனந்த் தேவகொண்டா. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் இவர். Anand Devarakondaஅவர் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை ஒட்டி... மேலும் பார்க்க

"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா

டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத்தில்... மேலும் பார்க்க

``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரைய... மேலும் பார்க்க

``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இ... மேலும் பார்க்க

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரு... மேலும் பார்க்க

Yash: ``எனக்கு பேய் படம்னா பயம், பார்க்கமாட்டேன்" - திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல டாக்!

KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான 'ராமாயணம்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங... மேலும் பார்க்க