செய்திகள் :

லேப்டாப் திருட்டு; த.வெ.க நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது; திருச்சியில் அதிர்ச்சி!

post image

திருச்சி, ஜங்சன் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மிப்டின் என்பவரது லேப்டாப் திருடு போய் உள்ளது. இது குறித்து, அவர் திருச்சி ரெயில்வே போலீஸில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பரணிதரன், கே.கள்ளிக்குடியை சேர்ந்த ரோகன் தேவ் ஆகியோர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் மிப்டினின் லேப்டாப்பை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பை திருடி கைது செய்யப்பட்ட பரணிதரன் தமிழக வெற்றிக் கழகத்தில் மணிகண்டம் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

baranitharan

இந்நிலையில், தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாக பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜயின் கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சியிலும் லேப்டாப் திருட்டில் த.வெ.கவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி!

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகில் உள்ள மணக்காட்டுப்புதூரைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இவரின் தந்தை தனியார் வங்கி ஒன்றில்... மேலும் பார்க்க

வாடகை வீட்டை விற்க மறுத்த பேராசிரியை; 1,400 கி.மீ பயணித்து வந்து கொலைசெய்த தம்பதி - பகீர் சம்பவம்!

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சத்யம் என்ற கட்டடத்தில் தபோஸ்மிதா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக... மேலும் பார்க்க

பார்சல் மூலம் போதைப்பொருள் வாங்கிய விஞ்ஞானி - கூரியர் ஊழியர்கள் தகவலால் போலீசில் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம், புனே ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் சர்காலே (39). விஞ்ஞானியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழா தேசிய வைராலஜி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெக்னிக்கல் ஆபீசர்' ஆகப் பணி... மேலும் பார்க்க

திருச்சி: 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 7 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது

திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி, தாய் தந்தை, இருவரும் பிரிந்த நிலையில் அவரது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந... மேலும் பார்க்க

திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாட்ஷா. இவரது மகன் பாதுஷா என்கிற பாஷா (வயது: 24). பிரபல ரௌடியான இவரை, நேற்று நள்ளிரவு திர... மேலும் பார்க்க

``அவர் குற்றவாளி, ட்ரக் அடிக்ட்; உண்மை தெரியாம பேசாதீங்க!" - கணவர் குறித்து வீடியோ வெளியிட்ட பெண்

பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜ் (38). இவரது மனைவி அட்சயா (25) இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். ராஜா தன் மனைவி குறித்து சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களி... மேலும் பார்க்க