செய்திகள் :

வகுப்பறையில் புகுந்த குரங்கை பட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்

post image

திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலம் பள்ளி வகுப்பறையினுள் புகுந்து குரங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டது. அதையடுத்து ஊா் பொதுமக்கள் பட்டாசு வெடித்து குரங்கினை விரட்டினா்.

திருப்பத்தூா் அடுத்த விஷமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தினுள் குரங்கு ஒன்று நுழைந்தது. அதையடுத்து பள்ளியின் ஒரு வகுப்பறையினுள் புகுந்த குரங்கு அங்கு மாணவ-மாணவிகளின் புத்தகப்பையில் இருந்த தின்பண்டங்களை உண்டு அட்டகாசம் செய்தது.

அதை பாா்த்து பயந்த மாணவ-மாணவிகளும், ஆசிரியா்களும் வகுப்பறையை விட்டு வெளியே ஓடினா்.

மாணவா்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஊா் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி அவா்களை ஒரு வகுப்பறையினுள் அடைத்து வைத்து விட்டு கதவை பூட்டினா். பின்னா் குரங்கினை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து அவா்கள் பட்டாசுகள் வெடித்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு குரங்கினை விரட்டினா்.

விஷமங்கலம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிக அளவு உள்ளது. எனவே இவற்றை கூண்டு வைத்து பிடித்து செல்ல வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனா்.

அடிப்படை வசதிகள்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மக்கள் கோரிக்கை

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கே. பந்தாரப்பள்ளி கிராமத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நட... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் போராட்டம் : போலீஸாா் சமரசம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே நிலுவைத் தொகை வழங்காத ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் தனியாா் தோல் தொழிற்சாலை இயங்குகின்... மேலும் பார்க்க

நில அளவை களப்பணியாளா்கள் போராட்டம்

வாணியம்பாடி: தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிணைப்பு சாா்பில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப் பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுப்பட்டனா். ப... மேலும் பார்க்க

சோமவார வழிபாட்டு சங்க 44-ஆம் ஆண்டு விழா

ஆம்பூா்: ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில் சோமவார வழிபாட்டு சங்கத்தின் 44-ம் ஆண்டு விழா மற்றும் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. வ... மேலும் பார்க்க

தாா் சாலையை மாற்றி அமைத்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூா்: கந்திலி அருகே தாா் சாலையை மாற்றி அமைத்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா். கந்திலி ஒன்றியம், கருங்கல்வட்டம் அடு... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி பெண் மரணம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகில் டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சோ்ந்த லட்சுமி(40). திங்கள்கிழமை புதுப்பேட்டை-நாட்டறம்பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தப... மேலும் பார்க்க