செய்திகள் :

"வாட்டர் கேன் போட்டிருக்கேன்; காஃபி டே-ல வேலை பார்த்திருக்கேன்" - 'மொத ராத்திரி' ரிஷிகாந்த்

post image

நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் 'மொத ராத்திரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Modha Rathiri | மொத ராத்திரி
Modha Rathiri | மொத ராத்திரி

ஜூனியர் ஆர்டிஸ்ட், சிறு சிறு வேடங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் எனப் படிப்படியாக முன்னேறி இன்று ஹீரோவாகியிருக்கிறார் ரிஷிகாந்த். அவருடைய சினிமா பயணம் தொடர்பாக நம்முடைய சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

ரிஷிகாந்த், "ஒரு கட்டத்துல எல்லாமே முடிஞ்சிடுச்சுனு நினைச்சு எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிடலாம்னு இருந்தேன். அப்போதான் 'மொத ராத்திரி' வாய்ப்புக் கிடைச்சது. ஒவ்வொரு முறையும் இப்படியான விஷயங்கள்தான் தோணும்.

ஆனா, ஒவ்வொரு முறையும் எதை முடிவுனு நினைக்கிறேனோ, அதுதான் எனக்கு தொடக்கமாகவும் மாறியிருக்கு. சினிமாவுக்குள்ள வர்றதுக்கு முயற்சி பண்ற சமயத்துல நிறைய வேலைகள் பார்த்திருக்கேன்.

ஆனா, அந்த வேலைக்கெல்லாம் அதிகபட்சமாக ஒரு வாரம்தான் போவேன். காஃபி டே-ல வேலை பார்த்திருக்கேன். ஃப்ரண்டு ஒருத்தர் தண்ணீர் கேன் போடுற பிசினஸ் பண்ணிட்டு இருந்தாரு.

Rishikanth - Modha Rathiri
Rishikanth - Modha Rathiri

அவர் மூலமா, வடபழனி, வளசரவாக்கம் ஏரியாவுல தண்ணீர் கேன் போட்டுட்டு இருந்தேன். அப்புறமா, சினிமாவுல ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிச்சேன். நிறைய படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டா நடிச்சிருக்கேன். அப்போ என்னுடைய முகம் தெரியக்கூடாதுனு கடைசில போய் நின்னுடுவேன்.

ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்கும்போது சினிமாவுலதான் இருக்கோம்ங்கிற எண்ணம் வரும். தினமும் 300 ரூபாய் பேட்டா சம்பளம் கிடைச்சிடும். அங்கேயே எனக்கு சாப்பாடும் கிடைச்சிடும்.

பிறகுதான் சிலர், 'நீ ஏன் இதெல்லாம் பண்ற, நீ லீட் மெட்டீரியல். அதுக்கான முயற்சிகளைப் பாரு'னு அட்வைஸ் பண்ணினாங்க. அங்கிருந்துதான் எனக்கான விஷயங்களைத் தேடத் தொடங்கினேன். இவையெல்லாம்தான் என் கரியரை நோக்கி நகர்வதற்கான படிகள்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

`என் விசுவாசத்தைப் பார்த்து தனிக்கடை வச்சுக் கொடுத்திருக்கார் முதலாளி!' - 'காதல்' கரட்டாண்டி அருண்

'காதல்' படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் சிறுவன் கரட்டாண்டியாக நடித்தவர் அருண். அந்தப் படத்தின் ரீச் மூலம் 'சிவகாசி' உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்தார். பிறகு திரையில் ஆளை... மேலும் பார்க்க

Once More: "என் வாழ்க்கையில் கடினமான காலக்கட்டத்தில் இருந்தபோது தான்.!"- அதிதி ஷங்கர் ஷேரிங்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள படம் 'ஒன்ஸ் மோர்'. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.... மேலும் பார்க்க

Jailer 2: "என் கணவர் என் கனவை நம்பி அதை நிஜமாக்கினார்.!" - 'ஜெயிலர் 2' நடனம் குறித்து நடிகை பூர்ணா

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி, அதில் நடித்திருந்த நட்சத்திரங்கள் என இவைய... மேலும் பார்க்க

``தனி ஒருவர் 2 Update; அரசியல் வருகை; ரசிகர்கள் சந்திப்பு" - நடிகர் ரவி மோகன் பகிரும் தகவல்கள்

ரவி மோகனின் பிறந்த நாள் செப்-5-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு ரசிகர்களைச் சந்திக்கும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யவிப்படவிருக்கிறது. இதன் முன்னோட்டமாக கள்ளக்குறிச்... மேலும் பார்க்க

Pyaar Prema Kalyanam Review: ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படைப்பில் இதையும் கவனித்திருக்கலாமே?

திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் ஏன் தனது வீட்டை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும், காதலில் சமத்துவம் பேசும் ஆண்கள், திருமணத்துக்குப் பிறகும் அதே சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்களா - இந்த ... மேலும் பார்க்க

90 செஷன்கள்; தோள்பட்டை மூட்டு விலகல் - 'டிசி' படத்திற்காக லோகேஷ் கனகராஜின் டிரான்ஸ்பர்மேஷன்!

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படம் வசூலை அள்ளி வருகிறது. வாமிகா கேபி, கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்... மேலும் பார்க்க