செய்திகள் :

விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த பிரபல சோமாலிய நடுவர்

post image

உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் நடுவராகச் செயல்படவிருந்த சோமாலியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நடுவர் ஓமர் அர்தானுக்கு (Omar Artan) அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா (FIFA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகக் கோப்பையில் நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 முக்கிய நடுவர்களில் ஓமர் அர்தானும் ஒருவர். இந்தத் தொடரில் பங்கேற்பதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் நடுவராகக் களம் காணும் முதல் சோமாலியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க அவர் தயாராக இருந்தார்.

இதற்காக கடந்த சனிக்கிழமை அன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து விமானம் மூலம் அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்தடைந்தார். அவரிடம் முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இருந்தபோதிலும், அமெரிக்கக் குடியுரிமை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூடுதல் பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் இஸ்தான்புல்லுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, " போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர் அர்தானின் விசா அந்தஸ்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பால் (CAF) 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஆண் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமர் அர்தானுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சோமாலிய அரசு மற்றும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "விளையாட்டின் நேர்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை இது" என்று சோமாலிய விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' - 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்!

கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்... மேலும் பார்க்க

தீர்ந்தது குழப்பம்; இனி கால்பந்து திருவிழா! FIFA உலகக்கோப்பை போட்டிகளை எங்கு, எப்படிப் பார்ப்பது?

கால்பந்து ரசிகர்களின் மாதக்கணக்கிலான குழப்பமும் காத்திருப்பும் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான FIFA உலகக்கோப்பை 2026, இன்று அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவி... மேலும் பார்க்க

2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஒரு டிக்கெட் விலை ரூ.95 கோடியா? விண்ணை தாண்டும் மறுவிற்பனை சந்தை

வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கான ஒரு சாதாரண டிக்கெட், மறுவிற்பனை சந்தையில் சுமார் 11.5 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 95 கோ... மேலும் பார்க்க

மெஸ்ஸி படைக்கு மூளையாக உதவும் `AI' - உலகக் கோப்பையில் களமிறங்கும் கூகுளின் கேம் சேஞ்சர்!

கால்பந்து... உணர்ச்சிகளின் உச்சம்! கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரோடு கலந்த இந்த விளையாட்டில், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகிவிட்டது. ஆம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள F... மேலும் பார்க்க

FIFA: சர்ச்சை கோல்... சரித்திர கோல்! ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய மரடோனா!

FIFA World Cup Diariesகால்பந்து உலகில் சில போட்டிகள் வெறும் ஆட்டமாக முடிந்துவிடுவதில்லை; அவை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் 1986-ம் ஆண்டு உலகக்... மேலும் பார்க்க