புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?
விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?
வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விசாலமான, பாதுகாப்பான இடமாகவும், அவைக் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மேற்பார்வையில் 7 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன்படுத்தும் பணியில் த.வெ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் கேட்டபோது, ``த.வெ.க தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாளில், தளபதி வருகைக் குறித்த தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, காவல்துறையினரிடம் அனுமதி கேட்போம். அதற்கு முன்னதாக, இடத்தை சமன்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் 26 ஏக்கரில் இருந்து 30 ஏக்கர் வரையிலான விசாலமான இடத்தைத் தான் தேர்வு செய்திருக்கிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்யவும் 50 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு வருகிறோம்’’ என்றார்.














