செய்திகள் :

”விஜய், உதயநிதியைச் சமாளிக்க டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும்” - அதிமுக நிர்வாகி ஆலோசனை

post image

சட்டமன்றத் தேர்தல் தோல்வி, அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் ஐக்கியமாகி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது.

அதிமுக நிர்வாகி பத்ம.குமரேசன்
அதிமுக நிர்வாகி பத்ம.குமரேசன்

இன்று தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர், 'தலைமையகத்தில் புகார் பெட்டி ஒன்றை வைக்க வேண்டும். நிர்வாகிகள் பற்றிய புகார்களை அதில் கட்சியினர் போடுவார்கள். புகார் பெட்டிக்கு வரும் புகார்களை நீங்களே படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியில்லாத நிர்வாகிகள் குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்கலாம். இது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என பேசியதாகச் சொல்கிறார்கள்.

இதே போல் கும்பகோணம் மாநகரத்தின் பகுதி கழகச் செயலாளர் பத்ம.குமரேசன் கும்பகோணம் மாநகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர் அதிமுக வலுவடைவதற்கு கட்சியில் டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும் என்றுள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி, தனியாக கட்சி நடத்தி அதன் பொதுச்செயலாளராக இருப்பவரை நாம் சேர்க்க வேண்டும் என இந்த நேரத்தில் பேச வேண்டாம்.

இப்போதைய சூழலுக்கு இது சரி வராது. இந்தச் செய்தி வெளியே போய்விடும் என்று மடைமாற்றியுள்ளார். இது அரசியல் வட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தினகரன்
டி.டி.வி.தினகரன்

இது குறித்து பத்ம.குமரேசனிடம் பேசினோம், ''கட்சி வளர்ச்சி பெற இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். இதே போல் டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்றேன். இதை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட அனைவரும் விரும்புகின்றனர்.

அதையே நானும் சொல்கிறேன். அதிமுக வலுவடைய வேண்டும் என்றால் தினகரனைச் சேர்க்க வேண்டும் என்று பேசினேன். தற்போதுள்ள சூழலுக்கு அரசியல் ரீதியான நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கவுண்டர் கொடுக்க வேண்டும். அதற்கு சரியான நபர் டி.டி.வி.தினகரன். விஜய், உதயநிதி போன்றவர்களைச் சமாளிக்கவும், கட்சி வளர்ச்சி பெற்று பழையபடி வலுவாக மாறவும் தினகரன் அவசியம் வேண்டும்'' என்றார்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க