செய்திகள் :

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

post image

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில்.

அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் ஒன்று காணிக்கையாக வழங்கி இருக்கிறார் விஜய்.

விஜய்யின் இந்தக் கோயில் விசிட்டை சாதாரண கோயில் விசிட் ஆக கடந்துவிட முடியாது.

காரணம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகியோரும் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, இந்தக் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

அதனால், விஜய் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றுள்ளது கவனம் பெறுகிறது.

மூகாம்பிகை கோயிலில் விஜய் - வெள்ளி வாள்
மூகாம்பிகை கோயிலில் விஜய் - வெள்ளி வாள்

அதே மாதிரி வாளுக்கு ஒரு பின் கதை உண்டு.

1984-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது குணமாகி, தேர்தலிலும் வெற்றி பெற்ற பிறகு இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் எம்.ஜி.ஆர்.

அப்போது அவர் இந்தக் கோயிலுக்கு 1.5 கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக வழங்கினார்.

அதே மாதிரி இன்று விஜய்யும் மூகாம்பிகை கோயிலுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இதுவும் விஜய்யின் மூகாம்பிகை கோயில் விசிட்டில் கவனம் பெறுகிறது.

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க

`இணையுடன் சண்டை; மனிதனைப் போலவே கோபித்துக் கொள்ளும் ஆண் கொரில்லா' - இணையத்தை கவர்ந்த வீடியோ

விளையாட்டாகவோ அல்லது கோபமாகவோ சண்டை போட்டுக் கொண்ட பிறகு மனிதர்கள் எப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்களோ, அதேபோல் ஒரு கொரில்லா செய்திருக்கும் சுவாரசியமான செயல் இப்போது இணையவாசிகளைப் ப... மேலும் பார்க்க