செய்திகள் :

`விஜய் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்; அமைச்சரவையில்..!' - திருமாவளவன் சொன்ன பதில்!

post image

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கும் முக்கியமான ஒன்று.

தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் சிலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்பது தெரிகிறது.

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின் படி, காங்கிரஸ், விசிக அமைச்சரவையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இணையுமா என்கிற கேள்விக்கு அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில்...

"ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சரவை அழைப்பிற்கு நன்றி. எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கடந்த 8-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடியது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் 'அமைச்சரவையிலும் இடம் பெற வேண்டும்' என்கிற கருத்தை முன்மொழிந்தது அனைவருக்கும் அறிந்ததே.

ஆனாலும் நிறைவாகத் தலைவர் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்கிற உறுதியைத் தந்தார்கள்.

அதன் அடிப்படையில் 9-ம் தேதி பொதுச் செயலாளர்கள் இரண்டு பேரோடும் கலந்து பேசி, ஆட்சி அமைப்பதற்கு மட்டுமே நம்முடைய ஆதரவை நல்குவது என்கிற நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் நல்கினோம்.

பதவி ஏற்புக்குப் பிறகு வேளச்சேரிக்கு வருகை தந்த விஜய் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அதை இப்போது மீண்டும் வெளிப்படையாக ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்திருக்கிறார்.

இது குறித்து எமது முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில பொருளாளர், முதன்மை செயலாளருடன் கலந்து பேசிய பின்னர் எங்கள் முடிவை அறிவிப்போம்". என்றார்.

``சி.வி.சண்முகம் சொல்வது 100% உண்மை!" - விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சல... மேலும் பார்க்க

சடாரென வந்த `விஜய்’ போட்டோ; சபைக்குறிப்பில் நீக்கப்பட்ட ஊழல் உறுதிமொழி - புதுச்சேரி பதவியேற்பு கலகல

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான 16-வது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. அதில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து மே 13-ம் தேதி... மேலும் பார்க்க

கரூரில் 17 காவல்துறை அதிகாரிகள் ஒரே அடியாக அதிரடி மாற்றம்! - பின்னணி என்ன?

கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தர்மபுரி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கரூர்..... மேலும் பார்க்க

'எது சரியோ அதை செய்யுங்க!' உத்தரவிட்ட முதல்வர் விஜய்? - மத்திய அரசுடன் மோத தயாராகும் தமிழக அரசு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு அங்கமான பி.எம்.ஸ்ரீ திடத்தில் தமிழக அரசு இன்னும் இணையவில்லை. விரைவில் இந்தத் திட்டத்தில் இணையுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தது... மேலும் பார்க்க