செய்திகள் :

"விஜய், நாவை அடக்கிப் பேச வேண்டும்; நாங்கள் களத்தில் இல்லையென்று சொல்வதா?" - பொங்கும் செல்லூர் ராஜூ

post image

"நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.." என்று கொந்தளித்துப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், "பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தாலும் எந்தத் திட்டமும் நிறைவேறவில்லை.

பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக உள்ளது என முதலமைச்சர் தனக்குத்தானே சொல்லக்கூடாது, பெண்களும் பொதுமக்களும் சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருந்தது. தற்போது குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

எனது தொகுதியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மக்களுக்கு குடை, டிபன் கேரியர் என் என்னென்னவோ கொடுக்கிறார். செல்லூர் ராஜூ சொல்லும் திட்டத்தை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிடுகிறார். மூர்த்தியைப் போல ஒரு அமைச்சரை பார்த்ததில்லை. பொய்களைக் கூறி மக்களை திரட்டி முதல்வருக்கு கூட்டம் காட்டுகிறார்.

முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வரவில்லை என மதுரை மக்கள் கூறுகின்றனர். ஆனால், அமைச்சர் மூர்த்தியின் கிழக்குத்தொகுதிக்கு மட்டும் தண்ணீர் வருகிறது. நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஆளும்கட்சி எதிர்கட்சி என தொகுதிகளை பிரித்துப் பார்க்கவில்லை. அமைச்சர் மூர்த்தி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளார்கள், என் அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் உடனே மதுக்கடைகளை மூட உத்தரவிடுவார் என கடந்த தேர்தலில் கனிமொழி பேசினார். பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்தனர். இந்த ஆட்சியில் பெண்கள் மாநாடு நடத்தி என்ன செய்யப்போகிறார்கள்? பணத்தை கொடுத்து கூட்டத்தை அழைத்து வந்து போட்டோ ஷூட் எடுப்பார்கள் அவ்வளவுதான்.

"அதிமுக களத்தில் இல்லாத கட்சி என தவெக தலைவரும் நிர்வாகிகளும் பேசுகிறார்களே?" என்ற கேள்விக்கு,

"நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. விஜய் நடிகர் என்பதால் கூட்டம் வருகிறது, மற்ற நடிகரைவிட கொஞ்சம் கூடுதலாக கூட்டம் கூடுகிறது. இவரை விட வடிவேலு, நயன்தாராவுக்கு கூட்டம் கூடும், நடிகருக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்..

எம்ஜிஆர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து கிடைத்த பணத்தில் மக்களுக்கு நல்லது செய்து, ஆட்சியில் இல்லாத திமுக-வில் சேர்ந்து உழைத்த பின்புதான் திமுக ஆட்சிக்கு வந்தது, படிப்படியாக எம்ஜிஆர் வளர்ந்தார், ஆட்சியைப் பிடித்தபோது எனக்கு சூடும் வெற்றி மாலை ராமச்சந்திரனுக்கு உரியது என அண்ணா பேசினார். அப்படி படுத்துக்கொண்டே ஜெயிக்க வைத்தவர்.

அதுபோல விஜய் ஆதரவு கொடுத்துள்ளாரா? இவர் ஆதரவால் வெற்றி பெற்றவர்கள் உள்ளார்களா? நான் விஜய் பற்றிப் பேசினால் அதிகமான விமர்சனம் ஆகிவிடும்.

கூட்டணி பற்றி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார், கூட்டணி என்பது தேர்தலில் பார்ட்னர், வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி. கொள்கை கூட்டணி இல்லை.

விஜய்
vijay

திமுக பாஜகவோடு வைத்தது கொள்கை கூட்டணி இல்லை, அண்ணா காலத்தில் இருந்தே கூட்டணி இப்படித்தான் உள்ளது. திமுகவுக்கும் சிபிஎம்-முக்கும் என்ன கொள்கை உள்ளது? எல்லாமே அப்படித்தான். நாங்கள் களத்தில் இல்லை என சொல்வது முட்டாள்தனம். ஒரு ஒரே எம்ஜிஆர் தான், எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. எந்தத் தேர்தலில் விஜய் நின்று வென்றுள்ளார்? கட்சி தொடங்கும் போது அவரை வரவேற்றவன் நான். எம்ஜி ஆர் போல விஜய் ஆக முடியாது.

டி.ஆர், பாக்யராஜ், சிவாஜி, கமலஹாசன் எல்லோரும் அரசியலுக்கு வந்தார்கள். அவர்கள் போல விஜய் ஆகிவிடக்கூடாது. எங்கள் கட்சி களத்தில் இல்லை என சொல்ல எவ்வளவு தைரியம்? நாவை அடக்கிப் பேச வேண்டும். எங்களைப் பற்றி மோசமாக பேசுபவருக்கு ஒன்று சொல்கிறேன், எங்கள் அலுவலகத்தில் தேர்தல் விருப்பமனு வாங்க வந்த கூட்டத்தைப் பார்த்தீர்களா?" என்றார்.

பிம்ப அரசியலின் மறுபக்கம் - தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 2

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜ... மேலும் பார்க்க

Khaleda Zia: 7 முறை சிறை; நாடு கடத்த சதி; யார் இந்த 'ஜனநாயகப் போராளி' கலிதா ஜியா?

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா இன்று காலமானார் என அவரது வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் சிதைவு, மூட்டுவலி, நீரிழிவு நோய், இதயப் பி... மேலும் பார்க்க

நம்ப வைத்து கைவிட்ட திமுக; போராட்டமயமாகும் தமிழகம் – வெற்று பாராட்டு விழாக்கள் தேவைதானா முதல்வரே?

கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் பெண்கள், Vibe with MKS என தன்னுடைய ஆட்சிக்கு தானே பாராட்டு விழாக்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி புலகாங்கிதம் அடைந்து ரொம்பவே ஜாலியாக இந்த ஆட்சியின் கடைசி ... மேலும் பார்க்க

ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்

2026-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வந்தால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் போரை நிறுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தீவிரமாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர... மேலும் பார்க்க

திருப்பூர் : திமுகவின் ’வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு’ – போட்டோ ஹைலைட்ஸ்

திருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர... மேலும் பார்க்க