செய்திகள் :

``விஜய் பதவியேற்பு விழாவில் அந்த 3 பேர் மிஸ்ஸிங்"- சமுத்திரக்கனி யாரை சொல்கிறார்?

post image

தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ``புதிய அரசுக்கு அனுபவம் இல்லை என்று எழும் விமர்சனங்களைத் தாண்டி, அவர்கள் மிகுந்த கவனத்துடன் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தத் தேர்தல் களம் பல்வேறு பரபரப்புகளையும் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சுனாமி போல வந்து, பலரது அரசியல் கணக்குகளைப் புரட்டிப் போட்டுள்ளது. தேர்தலில் பணம், சாதி, மதம் மற்றும் அகங்காரம் ஆகியவை முற்றிலுமாக உடைத்தெறியப்பட்டுள்ளன. பொதுமக்களை முட்டாள்கள் என்று பேசுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். எல்லா கட்சிகளிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, காசே தராத ஒருவருக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்களே ஆகச்சிறந்த அறிவாளிகள்.

தேர்தல் என்ற சுனாமி, அடித்துச் சென்ற போக்கில் சில நல்ல மனிதர்களையும் சேர்த்தே தூக்கிச் சென்றுவிட்டது. குறிப்பாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின், அண்ணன் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் தோல்வி எனக்கு மிகுந்த கஷ்டத்தை அளித்தது. அதேபோல், அண்ணன் சீமானின் தோல்வியும்... அவரது கட்சியிலிருந்து ஒரு சிலராவது சட்டமன்றத்திற்குள் சென்றிருக்கலாம். அண்ணன் திருமாவளவன் மற்றும் தம்பி அண்ணாமலை ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளே சென்றிருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

புதிய அரசுக்குக் கிடைத்த வெற்றி 108 இடங்களுடன் நின்றது. அது 120 இடங்களாக வராமல் போனதற்குப் பின்னால் பிரபஞ்சம் ஒரு பாடம் நடத்தியிருக்கிறது. ஆட்சி அமைப்பதில் தோழமை சக்திகள் காட்டிய பிணைப்பும், தேசத்தின் மீது மீண்டும் ஒரு சுமை விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் இறங்கி வந்து கைகொடுத்த விதமும் எனக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தது. பல நூறு கோடிகளைச் செலவு செய்த கட்சிகளெல்லாம் இந்தத் தேர்தல் அலையில் எங்கு சென்றன என்றே தெரியாமல் சல்லடையாகிப் போயின.

புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவைத் தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவே வியப்புடன் உற்றுநோக்கியது. ஆனால், பதவியேற்பு விழாவின் முதல் வரிசையில் மூன்று முக்கிய நபர்கள் மிஸ்ஸிங். அது எனக்கும் பெரும் வருத்தமாக இருந்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்களின் வீடு தேடிச் சென்று கை குலுக்கும் பண்பாளரான நீங்கள், அந்த மூன்று பேரையும் விட்டுவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் எனக்கு இருக்கிறது. உங்களைப் பின்தொடரும் பல கோடி இளைஞர்களுக்கு, குடும்ப அமைப்பின் மீது ஒரு நல்ல பிடிப்பை உருவாக்கும் முன்மாதிரியாக நீங்கள் திகழ வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க