செய்திகள் :

விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்

post image

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.

இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடிக்கடி காவல் நிலையத்திற்கு அந்த இளம் பெண் வந்து சென்றுள்ளார்.

அப்போது இந்தக் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றிய ஜெயபாண்டிக்கும், அந்த இளம் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆமத்தூர் அருகே வீட்டில் தனிமையிலிருந்த இளம் பெண்ணையும், காவலரையும் அந்தப் பெண்ணின் கணவர் உள்ளிட்டோர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அப்போது அவர்களிடமிருந்து காவலர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரின் வாகனத்தைச் சேதப்படுத்தினர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜெயபாண்டி
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜெயபாண்டி

தகவலறிந்த ஆமத்தூர் போலீசார், சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று, டூவீலரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக இளம்பெண்ணின் கணவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவலரைத் தற்காலிகமாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின் நேற்று ஜெயபாண்டியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சூலக்கரை காவல் நிலையம்
சூலக்கரை காவல் நிலையம்

அதே போல் விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் ஜெயச்சந்திரன் என்பவருக்கும், பாண்டியன் நகர் (ஊரக) காவல் நிலையத்தில் பணியாற்றும் ஜெயக்கொடி என்ற பெண் காவலருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது.

தற்போது இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலர் சூலக்கரை காவல் நிலையத்திற்குச் சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டதோடு காவல் நிலையத்தையே அமளி துமளி செய்திருக்கிறார்.

இதனால் சூலக்கரை ஆய்வாளர் எஸ்.பி-யிடம் இதை எடுத்துச் செல்ல ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயக்கொடியைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

செங்கல்பட்டு: ரத்த வெள்ளத்தில் சடலமாக மனைவி; திருமணமான 4வது மாதத்தில் நடந்த கொடூரம்; என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பாக்கம், சிலாவட்டம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து க... மேலும் பார்க்க

மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்!

பொதுவாக சுற்றுலா எதற்கு செல்வோம்? குடும்பம் அல்லது ஃபிரண்ட்ஸ் உடன் ஜாலி ட்ரிப், சுற்றி பார்க்க, குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தை பார்க்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக தானே? ஆனால், 1990-களில், மனிதர்களை சுட்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: மாணவி குத்தி கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை ஒப்படைக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

கொலையாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையம் முற்றுகைராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வ... மேலும் பார்க்க

`40 வழக்குகளில் தொடர்பு; தேடப்படும் முகமுடி கொள்ளையர்கள்’ - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நால்வழிச்சாலையில் மேற்கு காவல் நிலைய போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரினை நிறுத்தி சோதன... மேலும் பார்க்க

குமரி: அரசு நிலத்தை பங்குபோட்டு கொடுத்தாரா அதிமுக பிரமுகர்? - தாசில்தார் புகாரால் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்குட்பட்ட சிறமடம் பகுதியில் சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. அங்கு மின்சார சுடுகாடு அமைக்க அரசு சில மாதங்களுக்கு முன்பு முயன்றது. அதற்கு அப்பக... மேலும் பார்க்க

US: `சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்' - இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை அவரவர் நாட்டிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது வழக்கமாக ந... மேலும் பார்க்க