செய்திகள் :

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

post image

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து ஹோட்டல் ஊழியர்களும், டெலிவரி பாய்களும் மது அருந்திக்கொண்டு அதிக சத்தத்துடன் பாடல் கேட்டுக்கொண்டிருந்தனர். இது பாடகர் விக்ரம் சிங்கிற்கு இடையூராக இருந்தது. இதையடுத்து தனது வீட்டிற்கு அருகில் அமர்ந்து மது அருந்தவேண்டாம் என்று விக்ரம் சிங் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஹோட்டல் ஊரியர்களும், டெலிவரி பாய்களும் சேர்ந்து விக்ரம் சிங்கை சரமாறியாக அடித்து உதைத்தனர். இதில் விக்ரம் சிங் படுகாயம் அடைந்தார். அவரை அவரது மகன் உடனே மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பாரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), தீபன்சு (21), மோகன் விஸ்வகர்மா (32), விஜய் (36), மன்னு (26) மற்றும் ஒரு வாலிபர் ஆகியோரை கைது செய்தனர்.

இச்சம்பவத்திற்கு டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள வடகிழக்கு மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் சிங், தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக்கொண்டும் கூச்சலிட்டுத் தொந்தரவு செய்துகொண்டும் இருந்ததைக் கண்டு, அவர்களைச் சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அந்தக் கும்பல் அவரைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவான, நியாயமான மற்றும் முழுமையான விசாரணை நடைபெறுவதையும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அந்த அமைப்பு வலியுறுத்தியது.

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை

மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியினரின் மகனாக தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்... மேலும் பார்க்க

திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 3... மேலும் பார்க்க

சேலம்: பல ஆண்களுடன் ரகசிய உறவு; கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சி பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் 45 வயதான பூபதி. சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி 31 வயதான சுஜிதாஸ்ரீ. கடந்த 31 - ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய் - கோவையில் ஆச்சரியம்!

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர்... மேலும் பார்க்க