செய்திகள் :

`வெறும் காட்சிப் பொருளா ஜான்வி கபூர்?' 'PEDDI' படத்திற்கு எதிராக குவியும் விமர்சனங்கள்

post image

ராம் சரண் - ஜான்வி கபூர் நடிப்பில், ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'பெத்தி' திரைப்படம், வெளியானதில் இருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் ஜான்வி கபூர் நடித்த 'அச்சியம்மா' கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து பார்வையாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதாநாயகியை ஒரு காட்சிப் பொருளாகவும், பாலியல் ரீதியாகவும் சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Peddi - Ram Charan
Peddi - Ram Charan

எனினும் இந்த விமர்சனங்கள் படத்தின் இயக்கம் அல்லது ஒட்டுமொத்த கதையம்சத்தை விட, ஜான்வி கபூரின் கதாபாத்திர உருவாக்கத்தையே மையமாகக் கொண்டுள்ளன. 'அச்சியம்மா' கதாபாத்திரம் கதைக்கு எந்த முக்கியத்துவத்தையும் சேர்க்கவில்லை என்றும், ஆண் கதாபாத்திரங்களின் ஆசைப் பொருளாக மட்டுமே காட்டப்பட்டுள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது அக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, படத்திற்கு எந்தவிதத்திலும் பங்களிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக சில காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளன. ஒரு பயனர், "படங்களில் கதாநாயகிகளை ஒரு காட்சி பொருளாகக் காட்டுவதை எப்போது நிறுத்தப் போகிறார்கள்? ஒரு காட்சியில் கதாநாயகன் அவளது முகத்தை வர்ணிக்கிறான், ஆனால் கேமரா அவளது இடுப்பையும் மார்பையும் காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், "கதாநாயகிக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஆபாசமான, இழிவுபடுத்தும் மற்றும் பாலியல் ரீதியான காட்சிகளின் தொகுப்பு ஒரு பாத்திரமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது திரையரங்கில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அவமானம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராம் சரண் - பெத்தி திரைப்படம்
ராம் சரண் - பெத்தி திரைப்படம்

இன்னொரு சர்ச்சைக்குரிய காட்சியும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பயனர், "தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு அடியாள் ஜான்வி கபூரை பொது இடத்தில் அவமானப்படுத்த அவரது ஆடையை களைய முயற்சிக்கிறார். வில்லன் அதை ரசித்துப் பார்க்கிறார். கதாநாயகன் அவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, பின்னர் அவர்களை அடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அருவருக்கத்தக்க சித்தரிப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் எழும் இந்த எதிர்ப்புகள், படத்திற்கு வெளியான விமர்சனங்களிலும் பிரதிபலிக்கின்றன.

​இளைய தளபதி `டு' தளபதி - விஜய்-க்கு வாழ்த்துகளையும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

மை விகடன் (My Vikatan) தளத்தில் முதல்வர் விஜய்யின் திரைப் பயணத்தை பற்றி உங்கள் கருத்தைக் கட்டுரைகளாக எழுதி அனுப்புங்கள்!தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையான நடிகர் விஜய், தற்போது தமிழ் மக்களின் நெஞ்சில் க... மேலும் பார்க்க

KGF Yash: "நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்" - புற்றுநோய் பாதிக்கப்பட்ட ரசிகருடன் பேசிய நடிகர் யஷ்!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், `கே.ஜி.எஃப்' (KGF) படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவருமான நடிகர் யஷ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது தீவிர ரசிகர் ஒருவருடன் வீடியோ கா... மேலும் பார்க்க

இசை ராஜ்ஜியமும், திரை காவியமும்..! | இளையராஜா - மணிரத்னம் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ராம் சரண் Bodyguard சம்பளம் ஒரு நாளுக்கு 4 லட்சமா? - யார் இந்த கெவின் குண்டா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில்முறை தற்காப்புக் கலை (MMA) வீரரான கெவின் குண்டா (Kevin Kunta) என்பவரைத் தனது தனிப்பட்ட பாதுகாவலராக நியமித்துள்ளார்.ராம் சர... மேலும் பார்க்க

அஜித்தை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா

சென்னையில் அஜித் குமாருடன் வசித்து வந்த அவருடைய அம்மா மோகினி மணி உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் காலமானார்.திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் அஜித் குமாரின் தாயாரின... மேலும் பார்க்க

அனிருத்தின் `DC' இசை சாதனை: உலக அளவில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த தமிழ்ப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்கிறார், ‘ராக்ஸ்டார்’ அனிருத். தனது துள்ளலான இசையாலும், புதுமையான இசைக்கோப்புகளாலும் தொடர்ந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறார். அந்த வரிசையில், சமீபத்... மேலும் பார்க்க