செய்திகள் :

'வெற்றி தமிழ்நாடு 2026' முதலீட்டாளர்கள் மாநாடு: இன்று சென்னையில்.!

post image

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ நடைபெறவுள்ளது. இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், `` மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.

அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்
அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது. தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!" - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசாணையை... மேலும் பார்க்க

`இனி பெட்ரோல் பங்க்கில் ஆன்லைன் பரிவர்த்தனை கிடையாது?' - TNPDA எச்சரிக்கையின் பின்னணி என்ன?

சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளை வங்கிகள் முடக்கி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 830 பேருடன் சில பெட்ரோல... மேலும் பார்க்க

வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சம்; மொத்தமாக ராணுவத்துக்கு உயில் எழுதி நெகிழும் மதுரை முதியவர்!

மதுரை ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. 82 வயதான இவர், மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் மற்றும் உறவின... மேலும் பார்க்க

Kanimozhi: "காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க அரசு நடத்தும் நாடகம்தான் இது!" - கனிமொழி

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேச அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தவெக அரசு. ஆனால், இதில் திமுக எம்.பி-க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக!

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் ஏற்பாடு செய்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இத... மேலும் பார்க்க

ராஞ்சி தேர்வு முறைகேடு: ``கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" - மாணவர்கள் அமைப்பு உறுதி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளு... மேலும் பார்க்க