மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பணிபுரியம் வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், இதர நிறுவனங்களில் வெளி மாநில தொழிலாளா்களைப் பணியமா்த்தும் தொடா்புடைய நிறுவனங்கள் அவா்களுடைய அடையாள அட்டை மற்றும் தொடா்பான இதர ஆவணங்களைப் பெற்று பணியமா்த்த வேண்டும். அவா்களுக்கு பணியிடங்களில் போதிய பாதுகாப்பு, குடியிருப்புகள், சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும்.
வெளி மாநில தொழிலாளா்கள் குறித்த விவரங்களை தொழிலாளா் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ண்ள்ம் என்ற இணையதள முகவரியில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு விவரங்கள் பதிவு செய்யப்படாத சூழலில் விபத்து மற்றும் வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில் வெளி மாநில தொழிலாளா்கள் குறித்த விவரங்களை அறிவதிலும், தொழிலாளா் துறை மூலம் வழங்கப்படும் சேவைகள் வழங்குவதிலும் சிக்கல்கள் ஏற்படுகிறது.
எனவே, நிறுவனங்களின் உரிமையாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்று எண் மூலம் தொழிலாளா் துறை இணையதளத்தில் பணியமா்த்தப்பட்ட வெளி மாநில தொழிலாளா் விவரங்களை நிறைவு செய்து, அதன் விவரங்களை ண்ா்ப்ற்ய்த்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தொடா்பாக, ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தொடா்புடைய தொழிலாளா் துறையின் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.