செய்திகள் :

வேலூர்: குறைகளைச் சொன்ன தூய்மைப் பணியாளர்கள்; குறிப்பெடுத்துக்கொண்ட தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன்!

post image

லக பட்டினி தினத்தையொட்டி, வேலூர் சட்டமன்றத் தொகுதி த.வெ.க சார்பாக இன்றைய தினம் சி.எஸ்.ஐ மத்திய தேவாலய வளாகத்தில் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள் ஆகியோருக்கு மரியாதை நிமித்தமாக அழைப்புவிடுத்திருந்தார் எம்.எல்.ஏ எம்.எம்.வினோத் கண்ணன். அவரின் அழைப்பை ஏற்று, அவர்களும் தங்களின் குடும்பத்துடன் விருந்தில் கலந்துகொண்டனர்.

த.வெ.க வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். சுமார் 3,000 பேர் சாப்பிடும் வகையில், சிக்கன் பிரியாணி தயார்ச் செய்யப்பட்டிருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு இனிப்பு வழங்கி, அவர்கள் பகுதி குறைகளையும், அடிப்படைத் தேவைகளையும் கேட்டறிந்தார் வினோத் கண்ணன். விருந்துக்குப் பிறகு இலை எடுப்பது முதற்கொண்டு, வளாகத்தை சுத்தப்படுத்துவது வரை த.வெ.க-வினரே செய்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விருந்து

இது பற்றி, எம்.எல்.ஏ வினோத் கண்ணன் கூறுகையில், ``வறுமையைப் போக்கி, `பட்டினி இல்லாத உலகம்’ என்பதை உறுதி செய்வதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த நாளில், பொதுவாக உணவளிப்பது என்பதைவிட விருந்து வைப்பது தான் சிறந்ததாக இருக்கும். நாம் வாழும் இந்தப் பகுதியின் சுகாதாரம், தூய்மை மற்றும் பொது சுகாதாரத்தைப் பேணிக் காப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது.

எனவே தான், இந்த விருந்து நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களும் அவர்களின் குறைகளை என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முழு முயற்சிகளில் ஈடுபடுவேன்’’ என்றார் உறுதியாக.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க