செய்திகள் :

வேலூர்: `மாமூல் கேட்டு மிரட்டியது உண்மைதான்’ - தவெக ஒன்றியச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

post image

வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் உரிமையாளர்கள் சிலரை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளரான விஜயகுமார். இது தொடர்பாக இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபடும் வீடியோ, அண்மையில் வெளியாகியிருந்தது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்திலும் செங்கல் சூளை உரிமையாளர்கள் புகாரளித்திருந்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், போலீஸார் அவரிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் செங்கல் சூளை உரிமையாளர்களையே அழைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார்

இதனால், கொந்தளித்துபோன அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்றைய தினம் கணியம்பாடி பேருந்து நிறுத்தப் பகுதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

``மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியதைத் தட்டிக்கேட்டதால், சூளைக்கு திருட்டு மண் கடத்தியதாக த.வெ.க ஒன்றியச் செயலாளர் சொல்வதைக் கேட்டு போலீஸார் செயல்படுகின்றனர். த.வெ.க ஒன்றியச் செயலாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மக்கள் கொந்தளிப்போடு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், த.வெ.க-வில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான விஜய் மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்த விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

நீக்க அறிவிப்பு

கழக தோழர்கள் கட்சி ரீதியாக அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது. த.வெ.க மாவட்டச் செயலாளர் தரப்பில் விசாரித்தபோது, ``ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மாமூல் கேட்டு மிரட்டியது உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்’’ என்றனர்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க