செய்திகள் :

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

post image

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோ குடும்பத்துக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பதாக பேசியுள்ளார்.

மல்லை சத்யா, துரை, வைகோ
மல்லை சத்யா, துரை, வைகோ

வைகோவால் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவம்பர் 20-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வைகோ குடும்பத்துக்கு குறிப்பாக அவரது மகன் துரை வைகோவுக்கு இருக்கும் பல்வேறு சொத்துகள் வருமானங்கள் பற்றி பேசிய மல்லை சத்யா, "ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுகிறார். அதே போல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ," என்றும் கூறியிருந்தார்.

மல்லை சத்யாவின் கருத்துக்களுக்கு அன்றைய தினமே பதிலளித்த வைகோ, அவரை ஆலகால நஞ்சை கக்கும் பாம்பு என விமர்சித்துள்ளார்.

திருச்சி மதிமுக மாநாட்டில் வைகோ
வைகோ

வைகோ பேசியதாவது, "ஜமக்காலத்தில் வடிகட்டிய அப்பட்டமான அபாண்டமான பொய்கள். கோயபெல்ஸ் கூட இந்த பொய்களுக்கு முன்னால் கடுகாக போய்விடுவான். என் நேர்மை உலகறிந்தது, என் நாணயம் ஞாலமறிந்தது, என் ஜென்ம எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில் நேர்மை என்கிற கவசம்தான், வைகோவினுடைய நாணயம் தான் அவனை அரசியல் உலகத்திலே பாதுகாத்து வருகிறது என்பதை அனைத்து அரசியல் கட்சியினரும் அறிவார்கள்." எனப் பேசியுள்ளார்.

கோயபெல்ஸ்?

பொய்க்கு எடுத்துக்காட்டாக வைகோ கூறிய கோயபெல்ஸ் நாஜி கட்சியின் பிரச்சார அமைச்சராக இருந்தவர். ஹிட்லரின் கூட்டாளியான இவர் வரலாற்று ரீதியாக பொய்களுக்காக அறியப்படுகிறார். இவரது பொய்கள் மூலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு ஜெர்மனி முழுவதும் பரவியது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வெற்றிபெற்று வருவதாகவும் ஹிட்லரிடம் ரகசிய ஆயுதங்கள் இருப்பதாகவும் மக்களை நம்பவைத்திருந்தார். வானொலி, செய்தித்தாள், திரைப்படம், போஸ்டர்கள், பொதுக்கூட்டங்கள் என எல்லா ஊடகங்களையும் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தி நாஜிக்களின் பொய்களைப் பரப்பினார். "பெரிய பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும்" என்ற வாசகமே இவர் சொன்னதுதான் என்ற கருத்தும் உண்டு.

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண... மேலும் பார்க்க

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமைய... மேலும் பார்க்க

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து ... மேலும் பார்க்க

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர்.அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்... மேலும் பார்க்க

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மா... மேலும் பார்க்க