செய்திகள் :

வைபவ் சூர்யவன்ஷியின் `God Mode' சம்பவம் - லக்னோவை வீழ்த்தி ப்ளே-ஆஃபை நெருங்கிய ராஜஸ்தான்!

post image

ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான 64-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

RR vs LSG
RR vs LSG

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதற்கேற்ப களம் புகுந்த லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிரடியாக இருந்தது. மிட்செல் மார்ஷ் நங்கூரமாக நின்று ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து, சதத்தை தவறவிட்டாலும் அணியின் ரன் ரேட்டை எகிற வைத்தார்.

அவருக்கு பக்கபலமாக ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு வித்தியாசமான ஷாட்களை அடித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

221 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லக்னோவின் மயங்க் யாதவ், ஆகாஷ் சிங் பந்துவீச்சை துவம்சம் செய்த வைபவ், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 38 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

RR
RR

அவருக்கு உறுதுணையாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் (43 ரன்கள்) மற்றும் நிதானமாக ஆடிய துருவ் ஜூரெல் (53 ரன்கள்) அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். கடைசி ஓவர்களில் லக்னோ பௌலர்கள் கட்டுப்படுத்த முயன்றாலும், ஆட்டம் ராஜஸ்தான் கையை விட்டுப் போகவில்லை.

இறுதியில், 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் மாஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் தனது பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்ததோடு மிரட்டலான சேஸிங் மூலம் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது பிங்க் ஆர்மி!

'ருத்துராஜின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறதா?' - ப்ளெம்மிங் என்ன சொல்கிறார்?

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் சென்னை அணி ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

CSK vs SRH : நீங்க ஜெயிக்கணுங்றதை மறந்துட்டீங்களே சிவாஜி!' - சேப்பாக்கத்தில் சரிந்த சி.எஸ்.கே!

அவன் நமக்காக ஜெயிக்கிறான், இவன் நமக்காக ஜெயிக்கிறான்னு சொல்றியே, முதல்ல நீ உனக்காக ஜெயிச்சு காட்டுடா!' என்கிற மீமை நிஜமாக்கி காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ப்ளே ஆப்ஸ் செல்ல மற்ற அணிகள் சி.எஸ... மேலும் பார்க்க

மன்னர் சார்லஸை முந்திய பிராண்ட் மதிப்பு: 15,000 கோடி சொத்துடன் கலக்கும் பெக்காம் தம்பதி!

விளையாட்டு உலகிலும் பேஷன் உலகிலும் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் டேவிட் பெக்காம் மற்றும் விக்டோரியா பெக்காம் தம்பதி, தற்போது நிதித்துறையில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.2026-ஆம் ... மேலும் பார்க்க

LSG vs CSK: 'போய் வாடா...' - சென்னையின் Playoff கனவு இனி 'திக்.. திக்..' தான்! எப்படி வென்றது லக்னோ?

ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வருவதற்குச் சாதகமாக விளையாடி கொண்டிருக்கும்போது,சென்னை அணி மட்டும், "நீங்கள் எவ்வளவு உதவினாலும் நாங்கள் 6 அல்லது 7வது இடத்திலேயேதான் இர... மேலும் பார்க்க

வெகுண்டெழுந்த மும்பை; தொடர் தோல்வியில் பஞ்சாப்; தத்தளிக்கும் டாப்-4 கனவு - நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் நேற்று (மே-14)நடைபெற்ற பஞ்சாப் vs மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவ... மேலும் பார்க்க

'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' - விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!

இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி....RCB vs... மேலும் பார்க்க