செய்திகள் :

`ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்..!'- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது.

அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடக்கிறது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், ``முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக-வோடு ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மேற்கு வங்கத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைத் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக நியமித்திருக்கின்றனர்.

அதற்கு பதிலாக பாஜக தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் நியமித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப் போகிறேன்.

லோக் சபா தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலை திருத்தாத பாஜக, சட்டசபை தேர்தலின்போது மட்டும் அதில் முறைகேடுகள் இருப்பதாக கூறி திருத்தி இருக்கிறது.

அப்படி என்றால் லோக் சபா தேர்தலில் தவறான வாக்காளர் பட்டியல் மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மால்டாவில் தேர்தல் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், திரிணமுல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபரை கைதுசெய்த ஐ.பி.எஸ் அதிகாரியை, தேர்தல் பார்வையாளராக தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். திறமையான அதிகாரிகளை இங்கு பணியாற்ற விடுவதில்லை" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க