செய்திகள் :

ஹபீபி: "இப்படத்தின் சிறப்புகளைப் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன்!" - பட விழாவில் தவெக முஸ்தபா

post image

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான 'ஹபீபி' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது.

Habibi Movie
Habibi Movie

கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

விழாவில் பேசிய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, "நான் 1998-ஆம் ஆண்டிலிருந்தே அரசியல் மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், திரையுலக ஜாம்பவான்கள் நிறைந்த இந்த மேடை எனக்குப் புதியது.

உண்மையாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன், 2007-இல் பரத் நடிப்பில் வெளியான 'எம் மகன்' திரைப்படம்தான் நான் கடைசியாகப் பார்த்த படம். அதற்குப் பிறகு நான் திரையரங்கில் படமே பார்க்கவில்லை.

முஸ்தபா
முஸ்தபா

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த நான், சென்னையில் வளர்ந்த சிறுவயது இஸ்லாமியக் குடும்ப நினைவுகளை இப்படம் அச்சுப்பிசகாமல் காட்டியிருக்கிறது.

கொரோனாவால் மறைந்த என்னுடைய நண்பர் சம்சுதீனை இப்படம் நினைவூட்டியது. இத்திரைப்படத்தின் சிறப்புகளைப் பற்றித் தமிழக முதலமைச்சர் விஜய் அண்ணனிடம் நிச்சயமாக எடுத்துரைப்பேன்." என்றார்.

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கத... மேலும் பார்க்க

காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார்.காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு... மேலும் பார்க்க

"அப்பா கொஞ்ச நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார்!" - தயாரிப்பாளர் கே ராஜனின் மகன்!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.Producer K Rajan with his sonதயாரிப்பு மட்டுமின்றி,... மேலும் பார்க்க

``சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்; முதல்வர் விஜய்.! - பார்த்திபன்

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான 'ஹபீபி' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi ... மேலும் பார்க்க

K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் இன்று காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.K Rajanதயாரிப்பு மட்டுமின்றி, 'நம்ம ஊரு மாரிய... மேலும் பார்க்க

"நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல்ஹாசன் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். விஜய் மீது ரஜினிகாந்த் பொறாமைப்படுவதாகவும், விஜய் ஆட்சியமைக்கக் கூடாது என இரண்டு கட்சிகளை இணைக்க ரஜினிகாந்த் பேச்சு நடத்தியதா... மேலும் பார்க்க