செய்திகள் :

ஹரியானா: மைனர் பெண்ணுடன் காதல்; பேட்மிண்டன் வீரரைச் சித்ரவதை செய்து கொன்ற பெண்ணின் குடும்பம்?

post image

ஹரியானா மாநிலம் பிவாடி அருகில் உள்ள சைத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மோனு. பேட்மிண்டன் வீரரான மோனு ஹரியானாவில் மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்று இருக்கிறார்.

21 வயதாகும் மோனு சமீபத்தில்தான் 12வது வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இவர் பரிதாபாத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மைனர் பெண்ணுடன் மோனு வீட்டை விட்டு வெளியேறினார். போலீஸாரின் விசாரணையில் மைனர் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் மோனுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் மோனு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியில் படுகாயத்துடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மோனு
மோனு

உறவினர்கள் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் மோனு இறந்து போனார். பெண் வீட்டார் மோனுவைக் கடத்தி அடித்து உதைத்து வீட்டிற்கு வெளியில் போட்டுவிட்டதாக மோனுவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மோனுவின் உறவினர் நரேந்திரா கூறுகையில், ''மைனர் பெண்ணின் உறவினர்கள் சைத்பூரில் இருக்கின்றனர். இதனால் அடிக்கடி அப்பெண் தனது உறவினர்கள் வீட்டிற்கு வருவார்.

அப்படி வரும்போது மோனுடன் தொடர்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. மோனுவை பெண் வீட்டார் கடத்திச்சென்று மூன்று நாள்கள் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

மோனுவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மைனர் பெண் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க