செய்திகள் :

'10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

post image

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “பாஜக ஆளும் மாநிலங்களில் திட்ட அறிக்கைக்கு 5 மாதங்களில் அனுமதி வழங்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி

ஆனால், தமிழகத்திற்கு மட்டும் அற்பமான காரணங்களை கூறி நிராகரித்துள்ளனர். விளக்கங்கள் கேட்டிருந்தால் தமிழக அரசு பதிலளித்திருக்கும். கோவை மக்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளனர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணியை தான் மக்கள் வெற்றி பெற வைத்தனர். அப்படிப்பட்ட மக்களுக்கு கூட மெட்ரோ திட்டத்தை கொடுக்க மோடி அரசுக்கு மனமில்லை. விரிவான திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால் அதை கேட்க 15 மாதங்கள் அவகாசம் தேவையில்லை.

செந்தில் பாலாஜி

பாஜக அரசு மூன்றாவது முறையாக அமைந்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன. மெட்ரோ ரயில் திட்டம் நமக்குத் தேவை. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதிமுக நீட் தேர்வு  மசோதாவை வருட கணக்கில் மறைத்தார்கள். அப்படி நாங்கள் எதையும் மறைக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அவர்கள் ஏன் எடுக்கவில்லை. 15 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்த காரணத்தை கண்டறிந்து நிராகரித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவார். இங்கு மெட்ரோ ரயில் வந்தே தீரும்.

திமுக போராட்டம்

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கான விரிவான அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்கிற குறுகிய மனநிலை தான் காரணம். இதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் கணக்கு ஜீரோவாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலிலும் அதே கணக்கு தொடரும்.” என்றார்.

``பாஜக கூட்டணியால் SIR-ஐ ஆதரிக்கவில்லை" - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம்... மேலும் பார்க்க

'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் சுமார் 257 சதுர கிமீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தவறான தரவுகளை வைத்து... மேலும் பார்க்க

பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து நேற்று பாட்னாவில் கூடிய பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள எ... மேலும் பார்க்க

ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு ஆதரவாகவும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னா... மேலும் பார்க்க

கழுகார் : டெல்லி அசைன்மென்ட்; கன்ஃபியூஸ் ஆன நயினார் டு டெல்லி வழி சிபாரிசு; கடம்பூர் ராஜூ டென்ஷன்!

டென்ஷனாகும் கடம்பூர் ராஜூ!டெல்லி வழியாக சிபாரிசு...2026 சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து சந்திக்க ஏற்பாடாகிவருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்புக்குமிடையே இன்னும் பே... மேலும் பார்க்க

மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க