கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது ...
`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது...
பாரத பிரதமர் என்ன பேசப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் அவர்கள் இந்த மண்ணில் கால்வைத்த உடனே இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது.

எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். இதுவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்குச் சான்று.
வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நம்முடைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சியமைக்கும்.
ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா?
நம் கூட்டணிக் கட்சியினர் எழுச்சியோடு உள்ளனர். பெரும்பான்மையான இடங்களில் இந்தக் கூட்டணி வெல்லும். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி!
தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இது இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம்.
கேட்ட திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மத்திய அரசை குறை கூறுகின்றனர். அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நாங்கள் நிதியைப் பெற்றோம். அதிமுக ஆட்சியில் டெல்லியில் இருந்து பெற்றது ஏராளம்.
திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும்" என்று பேசியிருக்கிறார்.













