செய்திகள் :

29: "இந்தப் பக்கம் 'கர', அந்தப் பக்கம் 'கருப்பு'; அதனால எனக்கு கொஞ்சம்..." - இயக்குநர் ரத்னகுமார்

post image

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார்.

விது - ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் இப்படத்தை 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

29 Movie
29 Movie

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

மே 8 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய '29' படத்தின் இயக்குநர் ரத்னகுமார், "இந்தப் பக்கம் 'கர' அந்தப் பக்கம் 'கருப்பு' ஆகிய படங்களுக்கு இடையே என்னுடைய படம் வெளியாவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இதனை நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன்.

'இந்தப் படம் கோடை விடுமுறை நாட்களில், வார நாட்களில் வெளியாவதால், இளைஞர்களின் விடுமுறை காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்' என்று சொன்னார்.

இயக்குநர் ரத்னகுமார்
இயக்குநர் ரத்னகுமார்

இதற்கு முன்பு 2017-ல் எனது 'மேயாத மான்' படம் வெளியானபோது, விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதியது. ஆனால், இது ஒரு தனித்துவமான சவாலாக இருக்கிறது.

இந்த '29' படம் நான் எழுதிய சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவான கதைதான். எல்லோரும் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

kara: 'ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை தனுஷ் கொண்டு வந்திருக்கிறார்' - மாரி செல்வராஜ் பாராட்டு

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கர'. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று (ஏப்ரல்.30) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் 'கர' ... மேலும் பார்க்க

29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" - தெளிவுப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி

'மேயாத மான்' ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் '29' திரைப்படம் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' நிறுவ... மேலும் பார்க்க

"அதை பார்த்ததும் கண்களில் கசிந்த நெருப்புதான் இந்தப் பாடல்!" - 'கருப்பா கூட வா' பற்றி பா.விஜய்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரிஷா, ஸ்வாசிகா, நட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத... மேலும் பார்க்க

"வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்"- விஜய்யை நேரில் சந்தித்தது குறித்து நடிகை கனிகா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் 'வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்' என்று, தவெக தலைவர் விஜய்யை வா... மேலும் பார்க்க

29: 'இந்த விஷயத்தில கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!'- லோகேஷ் கனகராஜ்

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார்.விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் '... மேலும் பார்க்க

"இப்போது கூட கை நடுங்குகிறது; நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்வேன்.!" - பாடகி ஸ்வாகதா

பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தற்போது ரிஷிகேஷில் வசித்து வருகிறார். 'காற்றின் மொழி', 'பேச்சுலர்' உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் ஸ்வாகதா, தற்போது இசைத்துறையிலிருந்து விலகி ரிஷிகேஷ... மேலும் பார்க்க