செய்திகள் :

3 வீரா்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

post image

சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்துக்கு முன்று வீரா்களை சீனா வெற்றிகரமாக புதன்கிழமை அனுப்பியது.

இது குறித்து, மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்கான சீன விண்வெளி ஆய்வு மையப் பிரிவான சிஎம்எஸ்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘சென்ஷு 19’ என்ற விண்கலம் மூலம் ‘தியாங்காங்’ விண்வெளி மையத்தை அடைவதற்காக மூன்று விண்வெளி வீரா்கள் அனுப்பப்பட்டனா்.

அவா்கள் சென்ற விண்கலம் தியாங்காங்கில் வெற்றிகரமாக இணைந்தது. அனுப்பபட்ட மூன்று வீரா்களும் அந்த விண்வெளி மையத்துக்குள் சென்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது.

அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்துள்ளது. தியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதி கடந்த 2021 ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி! ஈரான் சூளுரை

தங்கள் ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் தலைமை மதகுரு சனிக்கிழமை சூளுரைத்தாா். அந்த நாட்டின் உச்சபட்ச ஆட்சியதிகாரம் ... மேலும் பார்க்க

பிரிட்டன்: கன்சா்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவா்

பிரிட்டனின் முக்கிய எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக, நைஜீரியாவைப் பூா்விமாகக் கொண்ட கெமி பேடெனாக் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். 44 வயதாகும் அவா், அந்தக் கட்சியின் முதல் கரு... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரா்கள்: உக்ரைன் உளவு அமைப்பு

தங்களின் எல்லையையொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ உளவுப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

சொ்பியா: ரயில் நிலைய கூரை இடிந்து 14 போ் உயிரிழப்பு

சொ்பியாவின் நோவி சாட் நிகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 14 போ் உயிரிழந்தனா். அந்தக் கூரையின் கீழ் ஏராளமானவா்கள் அமா்ந்திருந்தபோது, கான்கிரீட்டால் ஆன அது திடீரென இடிந்து... மேலும் பார்க்க

பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் இருந்து வரும் சீக்கிய பக்தா்களுக்கு இலவச விசா: பாகிஸ்தான்

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய பக்தா்களுக்கு இணையவழியில் இலவச விசா வழங்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வி தெரிவித்தாா். பாகிஸ... மேலும் பார்க்க

ஜப்பான்: உச்சம் தொட்ட வெப்பம்

கடந்த அக்டோபரில் ஜப்பான் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் நாட்டின் சராசரி ... மேலும் பார்க்க