செய்திகள் :

30% மதிப்பு குறைந்தும் தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்தை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத மக்கள்! - இனி?

post image

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம், இப்போது பாகிஸ்தானில் தனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிறான். ஆனால் தங்களது நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

தாவூத் இப்ராகிம் மற்றும் அவரின் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை ஏலம் விட்டு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த சொத்துக்களை வாங்க பொதுமக்கள் அச்சப்பட்டனர். அதோடு இச்சொத்துக்களில் சட்டச்சிக்கல் இருக்கும் என்று அஞ்சினர்.

ஆனால் இப்போது மக்கள் தாவூத் சொத்துக்களை ஏலம் விட்டால் அதனை வாங்க முன் வருகின்றனர். தாவூத் இப்ராகிம் குடும்பத்திற்கு சொந்தமான 4 சொத்துக்கள் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாக்கே என்ற கிராமத்தில் இருக்கிறது.

ஹசீனா, தாவூத்

மும்பாக்கே கிராமம் தான் தாவூத் இப்ராஹிம் சொந்த ஊர் ஆகும். அங்கு தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்கு சொந்தமான வீடு உட்பட சில சொத்துகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது. தற்போது தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் பெயரில் 4 விவசாய நிலம் இருந்தது.

அந்த நிலம் தான் இப்போது விற்பனைக்கு வந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதில் 3 சொத்துகள் ஏலம் விடப்பட்டது. ஆனால் அவை விற்பனையாகவில்லை. ஒரு சொத்தை டெல்லி வழக்கறிஞர் அஜய் என்பவர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகமாக கேட்டு ஏலத்தில் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அதற்கான பணத்தை செலுத்தவில்லை.

இதனால் அந்த விற்பனை ரத்து செய்யப்பட்டது. தற்போது மேலும் ஒரு சொத்தை சேர்த்து 4 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. இதில் சில சொத்துகள் கடந்த முறை ஏலம் போகாத காரணத்தால் இம்முறை சொத்து மதிப்பை 30 சதவீதம் குறைத்து ஏலம் விடப்பட்டன.

ஆனாலும் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் மீண்டும் ஒரு முறை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சொத்துகள் முதலில் தாவூத் இப்ராஹிம் தாயார் அமீனா பெயரில் இருந்தது. அதன் பிறகு தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் பெயருக்கு மாறியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1730 சதுர மீட்டர் விவசாய நிலம் ரூ.3.28 லட்சத்திற்கு ஏலம் போனது. இதே போன்று 2020ம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்குச் சொந்தமான 6 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. 2019, 2018, 2017ம் ஆண்டும் மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிம் குடும்ப சொத்துகள் ஏலத்தில் விற்கப்பட்டன செய்யப்பட்டது.

தற்போது மும்பையில் தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்குச் சொந்தமான பெரும்பாலான சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஏலத்தில் விற்பனை செய்துவிட்டனர். தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான கார் ஒன்று ரூ.32 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதே போன்று கும்பாகே கிராமத்தில் உள்ள தாவூத் இப்ராஹிம் வாழ்ந்த வீடு ரூ.11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன. அதிகமான சொத்துகளை இஸ்லாமிய டிரஸ்ட்களும், டெல்லி வழக்கறிஞரும் ஏலத்தில் எடுத்திருக்கின்றனர்.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க